For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'நான் அதற்கு சாட்சியாக இருக்கிறேன்..' இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் 2 வது மனைவி கல்கி போஸ்ட்!

  By
  |

  சென்னை: இயக்குனர் அனுராக் காஷயப்புக்கு ஆதரவாக அவருடைய இரண்டாவது மனைவி கல்கி கோச்சலின் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  Nayanthara Villain Anurag Meetoo case • Payal Gosh | Filmibeat Tamil

  தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப்.

  பிரபல இந்திப் பட இயக்குனராக இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளார்.

  பல ஹீரோக்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.. நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு!

  நடிகை பாயல் கோஷ்

  நடிகை பாயல் கோஷ்

  சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் மீது நடிகை பாயல் கோஷ், கடந்த சில நாட்களுக்கு பாலியல் புகார் கூறினார். இது பாலிவுட் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பரபரப்பானது. அவர், 'சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது அனுராக் காஷ்யப்பை மும்பையில் அவர் வீட்டில் சந்தித்தேன். என்னை தனியறைக்கு அழைத்துச் சென்றார்.

  தப்பி வந்தேன்

  தப்பி வந்தேன்

  கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார். அங்கிருந்து தப்பி வந்தேன். இந்தச் சம்பவம் 2014-2015 ஆண்டு நடந்தது. அப்போது, தனக்கு அமிதாப்பச்சன் நெருக்கமானவர் என்று அனுராக் காஷ்யப் கூறினார். மேலும், பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார். இவருக்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

  ஊக்குவிப்பது இல்லை

  ஊக்குவிப்பது இல்லை

  இது அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார் இயக்குனர் அனுராக் காஷ்யப். 'என் முதல் மனைவி, இரண்டவது மனைவி, என்னுடன் பணிபுரிந்த நடிகைகள், அல்லது பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ சந்திக்கும் பெண்கள் யாராக இருந்தாலும், இது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும் இல்லை அதை பொறுத்துக் கொள்வதும் இல்லை என்று கூறியிருந்தார்.

  கல்கி கோச்சலின்

  கல்கி கோச்சலின்

  அவருக்கு ஆதரவாக இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று அவர் முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் ஆதரவு தெரிவித்தார். இன்றும் அவருடைய இரண்டாவது மனைவி கல்கி கோச்சலின் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர்.

  பெண் சுதந்திரம்

  பெண் சுதந்திரம்

  கல்கி கோச்சலின் கூறியிருப்பதாவது: இந்த சமூக ஊடக சர்க்கஸுக்குள் நீங்கள் வரவேண்டாம். உங்கள் படைப்புகளில் பெண் சுதந்திரம் பற்றி போராடி இருக்கிறீர்கள், சினிமாவிலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்களின் நேர்மையை பாதுகாத்திருக்கிறீர்கள். நான் அதற்கு சாட்சியாக இருக்கிறேன்.

  பயங்கர நேரம்

  பயங்கர நேரம்

  எப்போதும் என்னை உங்களுக்குச் சமமாகவே பார்த்திருக்கிறீர்கள். விவாகரத்துக்குப் பிறகும் அப்படித்தான். திருமணத்துக்கு முன்பே, ஒரு வேலைச் சூழலில் பாதுகாப்பற்றதாக உணர்ந்தபோது எனக்கு ஆதரவாக நின்றீர்கள். எல்லோரும் ஒருவரையொருவர் துஷ்பிரயோகம் செய்வதும் தவறான தகவல்களை சொல்வதுமான இந்த பயங்கரமான நேரம், ஆபத்தானதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் இருக்கிறது.

  கண்ணியமான வேலை

  கண்ணியமான வேலை

  இது, குடும்பங்கள் மற்றும் நண்பர்களை அழித்து வருகிறது. இதை விட்டுவிட்டு, உங்களைச் சுற்றி இருப்பவர்களின் தேவைகளுக்கு கவனம் செலுத்தும் கண்ணியமான வேலையை தொடங்குங்கள், வலிமையாக இருங்கள். இவ்வாறு கூறியிருக்கிறார் கல்கி கோச்சலின். இதையடுத்து ரசிகர்கள், இது அரசியல் ஸ்டன்ட் என்பது எல்லோருக்கும் தெரிகிறது என்று கூறியுள்ளனர்.

  English summary
  Anurag Kashyap's ex-wife Kalki Koechlin, has come in support of her ex-husband in the controversial claim by Payal Ghosh
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X