»   »  கல்பனா என் மச்சினி அல்ல சகோதரி: ஊர்வசியின் முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயன்

கல்பனா என் மச்சினி அல்ல சகோதரி: ஊர்வசியின் முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை கல்பனா என் மீதும், என் மகள் மீதும் அதிக பாசம் கொண்டவர். அவர் எனக்கு மைத்துனி என்பதை தாண்டி சகோதரி போன்றவர் என்று ஊர்வசியின் முன்னாள்

கணவரும், நடிகருமான மனோஜ் கே. ஜெயன் தெரிவித்துள்ளார்.

நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா கடந்த 25ம் தேதி ஹைதராபாத்தில் மரணம் அடைந்தார். கல்பனாவின் உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

ஒரு நல்ல நடிகையை, நல்ல மனுஷியை மலையாள திரையுலகம் இழந்துவிட்டதாக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கல்பனா பற்றி ஊர்வசியின் முன்னாள் கணவரும், நடிகருமான மனோஜ் கே. ஜெயன் கூறுகையில்,

பாசம்

பாசம்

கல்பனாவுக்கு என் மீதும், என் மகள் தேஜு மீதும் அளவு கடந்த பாசம். அவர் எனக்கு மைத்துனி என்பதையும் தாண்டி ஒரு சகோதரி போன்றவர்.

விவாகரத்து

விவாகரத்து

நானும், ஊர்வசியும் விவகாரத்து பெற முடிவு செய்தபோது அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கல்பனா எங்களிடம் எவ்வளவோ கேட்டுக் கொண்டார்.

மகள்

மகள்

மகள் தேஜுவுக்காகவாவது நீங்களும், ஊர்வசியும் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என்று எவ்வளவோ பேசிப் பார்த்தார். நாங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

இழப்பு

இழப்பு

கல்பனாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது ஆகும். நானும், ஊர்வசியும் பிரிந்தபோது கல்பனா தினமும் போன் செய்து என்னைப் பற்றியும், தேஜுவை பற்றியும் நலம் விசாரிப்பார்.

English summary
Actress Urvashi's former husband cum actor Manoj K. Jayan told that Kalpana was like a sister rather than sister-in-law.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil