»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

நிர்வாணமாகவும், சம்பளம் இல்லாமலும் சினிமாவில் நடிப்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்றுகூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை தெனாலி பட வெற்றி விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கமல்பேசியதாவது:

2000-மாவது ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சந்தோஷமான ஆண்டு. அதில் எனக்கும் சந்தோஷம்தான்.

சினிமாவில் நான் நிர்வாணமாக நடிக்க மாட்டேன். அதை சென்சாரும் அனுமதிக்காது. அப்படி நடிப்பதை நானும்விரும்பவில்லை. அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இந்தித் திரையுலகிற்கும், தாதாக்களுக்கும் தொடர்பு இருப்பது குறித்து எனக்குத் தெரியாது. அதுபற்றியெல்லாம்நான் கவலைப்படுவதில்லை. ஆனால் இதெல்லாம் திடீரென நடந்துவிடவில்லை. கடந்த 15 வருடங்களாகவே இதுஇருந்து வருகிறது. ஒன்றும் புதிதல்ல.

இந்திப் படங்களுக்கு சரிவு ஏற்பட்டு வருவதற்குக் காரணம், அந்தப் படங்களுக்கு முதலீடு செய்பவர்களே.பணத்தை மட்டும் அவர்கள் கொட்டுகிறார்கள். எதற்காக போடுகிறோம் என்று அவர்கள் உணர்வதில்லை.பணத்தைக் கொடுத்து விட்டு, இப்படிச் செய், அப்படிச் செய் என உத்தரவிடுகிறார்கள்.

இந்தியத் திரைப்படங்களுக்கு முன்பு ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளில் நல்ல மார்க்கெட் இருந்தது. இப்போதுஅமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளது என்றார் கமல்.

யு.என்.ஐ.

Read more about: entertainment, kamal hassan, tenali

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil