»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னையில் அமெரிக்கத் திரைப்பட விழாவை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை திரைப்பட சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த திரைப்பட விழாவின்போது கோஸ்ட்ஆப் மிஸ்ஸிஸிப்பி, க்ராஸ்ட் லைட்டிங், செபரேட் பட் ஈகுவல், தி கலர் பர்பிள், மேல்கம் எக்ஸ், ஐ நோ ஒய் தி கேஜ் பர்ட் சிங்ஸ் ஆகியபடங்கள் திரையிடப்படுகின்றன.

விழாவை தொடங்கி வைத்து கமல் பேசுகையில், இந்தப் படங்களில் பெரும்பாலானவற்றை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன். அதைநீங்களும் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் படங்கள் எல்லாம் நல்ல படங்கள். சினிமாவில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்பதை எடுத்துக் கூறும்படங்கள். இது ஒரு அரிய வாய்ப்பு. இதற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு எனது நன்றிகள் என்றார்.

Please Wait while comments are loading...