»   »  தென்கொரியா சென்றார் கமல்நடிகர் கமல்ஹாசன் தென்கொரியா புறப்பட்டுச் சென்றார்.வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் சில காட்சிகளை சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்க உள்ளனர். இதற்காகபடப்பிடிப்புக் குழுவினர் விரைவில் சுவிஸ் செல்லவுள்ளனர்.இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளார். அதற்கு முன்பாக தென்கொரிய திரைப்படநிபுணர்களைச் சந்தித்து திரைப்பட தொழில் நுட்பங்கள் குறித்து விவாதிப்பதற்காக அவர் தென்கொரியாசென்றுள்ளார்.கொரிய பயணத்தை முடித்துக் கொண்டு சுவிஸ் செல்லும் கமல் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். கமல், ஸ்னேகா இடம்பெறும் பாடல் காட்சிகள் சுவிஸ் நாட்டில் படமாக்கபடவுள்ளன. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பட மும்முரத்திற்கு இடையே கமல், தனது நண்பரான ரமேஷ் அரவிந்துக்காக சதிலீலாவதி படத்தை கன்னடத்தில் தயாரிக்கிறார்.தமிழில் ரமேஷ் அரவிந்த், ஹீரா, குண்டு கல்பனா ஆகியோர் நடிக்க, பாலுமகேந்திராவின் இயக்கத்திலும், கமல்,கோவை சரளாவின் கலக்கல் காமெடி நடிப்பிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் சதி லீலாவதி.ஆரம்பத்தில் சிறிய வேடத்தில் வருவதாக இருந்த கமல், படத்தின் கதையால் உந்தப்பட்டு முழுப் படத்திலும் வந்துஅசத்தினார். இந்தப் படத்தை இப்போது கன்னடத்தில் தயாரிக்கவுள்ளார் கமல். ஹீரோ ரமேஷ் அரவிந்த்தான். கமல்ஹாசன்தமிழில் செய்த ரோலை கன்னடத்திலும் செய்யவுள்ளார். கன்னட திரையுலகில் கமல்ஹாசனின் நெருங்கியநண்பராக இருப்பவர் ரமேஷ் அரவிந்த். அவருக்கு இப்போது அங்கு மார்க்கெட் அவுட். இதனால் கமலின்படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து காலத்தை ஓட்டி வருகிறார்.தனக்கு மீண்டும் கன்னடத்தில் பிரேக் கிடைக்க ஒரு நல்ல ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்இருப்பதாக கமலிடம் புலம்பவே, சதி லீலாவதி படத்தையே அங்கு எடுப்போம் என்று கமல் கூறியுள்ளாராம்.சந்தோஷமாகி விட்டார் ரமேஷ் அரவிந்த். குண்டு கல்பனா, கோவை சரளா வேடங்களில் நடிக்கப் போவோர் குறித்து இதுவரை முடிவாகவில்லை.டெயில்பீஸ்: விருமாண்டி படத்தில் கமலுடன் ஜல்லிக்கட்டுக் காட்சியில் மல்லுக் கட்டிய இரண்டு காளைமாடுகளையும், அவரே தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறாராம்.

தென்கொரியா சென்றார் கமல்நடிகர் கமல்ஹாசன் தென்கொரியா புறப்பட்டுச் சென்றார்.வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் சில காட்சிகளை சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்க உள்ளனர். இதற்காகபடப்பிடிப்புக் குழுவினர் விரைவில் சுவிஸ் செல்லவுள்ளனர்.இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளார். அதற்கு முன்பாக தென்கொரிய திரைப்படநிபுணர்களைச் சந்தித்து திரைப்பட தொழில் நுட்பங்கள் குறித்து விவாதிப்பதற்காக அவர் தென்கொரியாசென்றுள்ளார்.கொரிய பயணத்தை முடித்துக் கொண்டு சுவிஸ் செல்லும் கமல் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். கமல், ஸ்னேகா இடம்பெறும் பாடல் காட்சிகள் சுவிஸ் நாட்டில் படமாக்கபடவுள்ளன. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பட மும்முரத்திற்கு இடையே கமல், தனது நண்பரான ரமேஷ் அரவிந்துக்காக சதிலீலாவதி படத்தை கன்னடத்தில் தயாரிக்கிறார்.தமிழில் ரமேஷ் அரவிந்த், ஹீரா, குண்டு கல்பனா ஆகியோர் நடிக்க, பாலுமகேந்திராவின் இயக்கத்திலும், கமல்,கோவை சரளாவின் கலக்கல் காமெடி நடிப்பிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் சதி லீலாவதி.ஆரம்பத்தில் சிறிய வேடத்தில் வருவதாக இருந்த கமல், படத்தின் கதையால் உந்தப்பட்டு முழுப் படத்திலும் வந்துஅசத்தினார். இந்தப் படத்தை இப்போது கன்னடத்தில் தயாரிக்கவுள்ளார் கமல். ஹீரோ ரமேஷ் அரவிந்த்தான். கமல்ஹாசன்தமிழில் செய்த ரோலை கன்னடத்திலும் செய்யவுள்ளார். கன்னட திரையுலகில் கமல்ஹாசனின் நெருங்கியநண்பராக இருப்பவர் ரமேஷ் அரவிந்த். அவருக்கு இப்போது அங்கு மார்க்கெட் அவுட். இதனால் கமலின்படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து காலத்தை ஓட்டி வருகிறார்.தனக்கு மீண்டும் கன்னடத்தில் பிரேக் கிடைக்க ஒரு நல்ல ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்இருப்பதாக கமலிடம் புலம்பவே, சதி லீலாவதி படத்தையே அங்கு எடுப்போம் என்று கமல் கூறியுள்ளாராம்.சந்தோஷமாகி விட்டார் ரமேஷ் அரவிந்த். குண்டு கல்பனா, கோவை சரளா வேடங்களில் நடிக்கப் போவோர் குறித்து இதுவரை முடிவாகவில்லை.டெயில்பீஸ்: விருமாண்டி படத்தில் கமலுடன் ஜல்லிக்கட்டுக் காட்சியில் மல்லுக் கட்டிய இரண்டு காளைமாடுகளையும், அவரே தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் கமல்ஹாசன் தென்கொரியா புறப்பட்டுச் சென்றார்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் சில காட்சிகளை சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்க உள்ளனர். இதற்காகபடப்பிடிப்புக் குழுவினர் விரைவில் சுவிஸ் செல்லவுள்ளனர்.

இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளார். அதற்கு முன்பாக தென்கொரிய திரைப்படநிபுணர்களைச் சந்தித்து திரைப்பட தொழில் நுட்பங்கள் குறித்து விவாதிப்பதற்காக அவர் தென்கொரியாசென்றுள்ளார்.

கொரிய பயணத்தை முடித்துக் கொண்டு சுவிஸ் செல்லும் கமல் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். கமல், ஸ்னேகா இடம்பெறும் பாடல் காட்சிகள் சுவிஸ் நாட்டில் படமாக்கபடவுள்ளன.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பட மும்முரத்திற்கு இடையே கமல், தனது நண்பரான ரமேஷ் அரவிந்துக்காக சதிலீலாவதி படத்தை கன்னடத்தில் தயாரிக்கிறார்.

தமிழில் ரமேஷ் அரவிந்த், ஹீரா, குண்டு கல்பனா ஆகியோர் நடிக்க, பாலுமகேந்திராவின் இயக்கத்திலும், கமல்,கோவை சரளாவின் கலக்கல் காமெடி நடிப்பிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் சதி லீலாவதி.ஆரம்பத்தில் சிறிய வேடத்தில் வருவதாக இருந்த கமல், படத்தின் கதையால் உந்தப்பட்டு முழுப் படத்திலும் வந்துஅசத்தினார்.

இந்தப் படத்தை இப்போது கன்னடத்தில் தயாரிக்கவுள்ளார் கமல். ஹீரோ ரமேஷ் அரவிந்த்தான். கமல்ஹாசன்தமிழில் செய்த ரோலை கன்னடத்திலும் செய்யவுள்ளார். கன்னட திரையுலகில் கமல்ஹாசனின் நெருங்கியநண்பராக இருப்பவர் ரமேஷ் அரவிந்த். அவருக்கு இப்போது அங்கு மார்க்கெட் அவுட். இதனால் கமலின்படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து காலத்தை ஓட்டி வருகிறார்.

தனக்கு மீண்டும் கன்னடத்தில் பிரேக் கிடைக்க ஒரு நல்ல ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்இருப்பதாக கமலிடம் புலம்பவே, சதி லீலாவதி படத்தையே அங்கு எடுப்போம் என்று கமல் கூறியுள்ளாராம்.சந்தோஷமாகி விட்டார் ரமேஷ் அரவிந்த்.

குண்டு கல்பனா, கோவை சரளா வேடங்களில் நடிக்கப் போவோர் குறித்து இதுவரை முடிவாகவில்லை.

டெயில்பீஸ்: விருமாண்டி படத்தில் கமலுடன் ஜல்லிக்கட்டுக் காட்சியில் மல்லுக் கட்டிய இரண்டு காளைமாடுகளையும், அவரே தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil