»   »  மும்பை எக்ஸ்பிரசுக்கு போலீஸ் பாதுகாப்பு மும்பை எக்ஸ்பிரஸ் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் இறுதி எச்சரிக்கையையும் நிராகரித்துவிட்ட கமல், தனது படத்தை மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலேயேவெளியிட முடிவு செய்துள்ளார்.சமீபத்தில் ஹைதராபாத் சென்ற கமலை நிருபர்கள் சந்தித்து மும்பை எக்ஸ்பிரஸ் பெயருக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு குறித்து கேட்டபோதுபதிலளித்த கமல்,சில அரசியல் கட்சிகளுக்கு சரியாக கொள்கைகள் இல்லை என்று தெரிகிறது. காந்திஜி கதர் ஆடையை உபயோகிக்க சொன்னாரே தவிரமற்ற ஆடைகளை பழிக்கவில்லை. அவற்றை வீசி எறிய சொல்லவில்லை. அது போன்ற உறுதி இப்போது உள்ளவர்களிடம் இல்லை.ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் ஏற்படும் நஷ்டம் என்ன என்று எனக்குப் புரியவில்லை என்று காட்டமாகவே பேசியிருந்தார்.மேலும் விருமாண்டி விஷயத்தில் பணிந்தது போல இந்தமுறை இறங்கிப் போக மாட்டேன் என்றும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.படத் தலைப்பு பற்றி விமர்சிக்கும் தலைவர்கள் மக்கள் முன் உள்ள பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவும் கற்றுக் கொள்ள வேண்டும்என்று விளாசியிருந்தார்.கமலின் இந்தப் பேச்சுக்கு ராமதாஸ் இதுவரை பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால், அந்தப் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்குஎதிரே தனது அமைப்பினர் போராட்டம் நடத்துவர் என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்துவிட்டார்.இந்தப் படமும் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினமான 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்ப்பால் வட மாவட்டங்களில்சில இடங்களில் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அரசுத் தரப்புடன் கமல் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்தப் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ்பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதுமே இந்தப் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையே மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி ஈஸியாக வாங்கி விட்டதாம். நல்ல தொகைக்குஇந்தப் படம் வாங்கப்பட்டுள்ளதாம். இப் படத்தை வாங்க சன் டிவி மோதினாலும் ஜெயா டிவி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அதைவாங்கிவிட்டதாம்.காரணம், ஜெயா டிவிக்கே படத்தை கொடுக்க கமல் விருப்பத்துடன் இருந்தது தானாம்.ராமதாஸால் ஏற்பட்டுள்ள சங்கடம், அதற்கு கருத்து சொல்லாமல் கருணாநிதி அமைதி காத்தது ஆகியவற்றால் அந்தத் தரப்பின் மீது கமல்கடுப்பில் இருக்கிறாராம்.அத்தோடு சண்டியர் படப் பிரச்சினையின்போது ஜெயலலிதா கொடுத்த ஆதரவு, இப்போது மும்பை எக்ஸ்பிரஸ் பெயர் பிரச்சனையில்ஜெயலலிதா கொடுத்து ஆதரவு ஆகியவற்றால் ஜெயா டிவிக்கே படத்தைத் தர கமல் ஆர்வம் காட்டியிருக்கிறார்."விருமாண்டி"யையும், ஜெயாதான் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மும்பை எக்ஸ்பிரஸை முடித்துவிட்டு கமல் நடிக்கப் போவது ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் தயாரிக்கும் படத்தில். அதை இயக்குவதுகாக்க.. காக்க...இயக்குனர் கெளதம் மேனன்.இதுவும் ஆக்ஷன் கலந்த படமாகத்தான் இருக்குமாம்.

மும்பை எக்ஸ்பிரசுக்கு போலீஸ் பாதுகாப்பு மும்பை எக்ஸ்பிரஸ் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் இறுதி எச்சரிக்கையையும் நிராகரித்துவிட்ட கமல், தனது படத்தை மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலேயேவெளியிட முடிவு செய்துள்ளார்.சமீபத்தில் ஹைதராபாத் சென்ற கமலை நிருபர்கள் சந்தித்து மும்பை எக்ஸ்பிரஸ் பெயருக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு குறித்து கேட்டபோதுபதிலளித்த கமல்,சில அரசியல் கட்சிகளுக்கு சரியாக கொள்கைகள் இல்லை என்று தெரிகிறது. காந்திஜி கதர் ஆடையை உபயோகிக்க சொன்னாரே தவிரமற்ற ஆடைகளை பழிக்கவில்லை. அவற்றை வீசி எறிய சொல்லவில்லை. அது போன்ற உறுதி இப்போது உள்ளவர்களிடம் இல்லை.ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் ஏற்படும் நஷ்டம் என்ன என்று எனக்குப் புரியவில்லை என்று காட்டமாகவே பேசியிருந்தார்.மேலும் விருமாண்டி விஷயத்தில் பணிந்தது போல இந்தமுறை இறங்கிப் போக மாட்டேன் என்றும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.படத் தலைப்பு பற்றி விமர்சிக்கும் தலைவர்கள் மக்கள் முன் உள்ள பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவும் கற்றுக் கொள்ள வேண்டும்என்று விளாசியிருந்தார்.கமலின் இந்தப் பேச்சுக்கு ராமதாஸ் இதுவரை பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால், அந்தப் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்குஎதிரே தனது அமைப்பினர் போராட்டம் நடத்துவர் என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்துவிட்டார்.இந்தப் படமும் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினமான 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்ப்பால் வட மாவட்டங்களில்சில இடங்களில் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அரசுத் தரப்புடன் கமல் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்தப் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ்பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதுமே இந்தப் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையே மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி ஈஸியாக வாங்கி விட்டதாம். நல்ல தொகைக்குஇந்தப் படம் வாங்கப்பட்டுள்ளதாம். இப் படத்தை வாங்க சன் டிவி மோதினாலும் ஜெயா டிவி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அதைவாங்கிவிட்டதாம்.காரணம், ஜெயா டிவிக்கே படத்தை கொடுக்க கமல் விருப்பத்துடன் இருந்தது தானாம்.ராமதாஸால் ஏற்பட்டுள்ள சங்கடம், அதற்கு கருத்து சொல்லாமல் கருணாநிதி அமைதி காத்தது ஆகியவற்றால் அந்தத் தரப்பின் மீது கமல்கடுப்பில் இருக்கிறாராம்.அத்தோடு சண்டியர் படப் பிரச்சினையின்போது ஜெயலலிதா கொடுத்த ஆதரவு, இப்போது மும்பை எக்ஸ்பிரஸ் பெயர் பிரச்சனையில்ஜெயலலிதா கொடுத்து ஆதரவு ஆகியவற்றால் ஜெயா டிவிக்கே படத்தைத் தர கமல் ஆர்வம் காட்டியிருக்கிறார்."விருமாண்டி"யையும், ஜெயாதான் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மும்பை எக்ஸ்பிரஸை முடித்துவிட்டு கமல் நடிக்கப் போவது ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் தயாரிக்கும் படத்தில். அதை இயக்குவதுகாக்க.. காக்க...இயக்குனர் கெளதம் மேனன்.இதுவும் ஆக்ஷன் கலந்த படமாகத்தான் இருக்குமாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை எக்ஸ்பிரஸ் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் இறுதி எச்சரிக்கையையும் நிராகரித்துவிட்ட கமல், தனது படத்தை மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலேயேவெளியிட முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாத் சென்ற கமலை நிருபர்கள் சந்தித்து மும்பை எக்ஸ்பிரஸ் பெயருக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு குறித்து கேட்டபோதுபதிலளித்த கமல்,

சில அரசியல் கட்சிகளுக்கு சரியாக கொள்கைகள் இல்லை என்று தெரிகிறது. காந்திஜி கதர் ஆடையை உபயோகிக்க சொன்னாரே தவிரமற்ற ஆடைகளை பழிக்கவில்லை. அவற்றை வீசி எறிய சொல்லவில்லை. அது போன்ற உறுதி இப்போது உள்ளவர்களிடம் இல்லை.ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் ஏற்படும் நஷ்டம் என்ன என்று எனக்குப் புரியவில்லை என்று காட்டமாகவே பேசியிருந்தார்.

மேலும் விருமாண்டி விஷயத்தில் பணிந்தது போல இந்தமுறை இறங்கிப் போக மாட்டேன் என்றும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.படத் தலைப்பு பற்றி விமர்சிக்கும் தலைவர்கள் மக்கள் முன் உள்ள பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவும் கற்றுக் கொள்ள வேண்டும்என்று விளாசியிருந்தார்.

கமலின் இந்தப் பேச்சுக்கு ராமதாஸ் இதுவரை பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால், அந்தப் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்குஎதிரே தனது அமைப்பினர் போராட்டம் நடத்துவர் என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்துவிட்டார்.

இந்தப் படமும் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினமான 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்ப்பால் வட மாவட்டங்களில்சில இடங்களில் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அரசுத் தரப்புடன் கமல் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்தப் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ்பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதுமே இந்தப் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி ஈஸியாக வாங்கி விட்டதாம். நல்ல தொகைக்குஇந்தப் படம் வாங்கப்பட்டுள்ளதாம். இப் படத்தை வாங்க சன் டிவி மோதினாலும் ஜெயா டிவி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அதைவாங்கிவிட்டதாம்.

காரணம், ஜெயா டிவிக்கே படத்தை கொடுக்க கமல் விருப்பத்துடன் இருந்தது தானாம்.

ராமதாஸால் ஏற்பட்டுள்ள சங்கடம், அதற்கு கருத்து சொல்லாமல் கருணாநிதி அமைதி காத்தது ஆகியவற்றால் அந்தத் தரப்பின் மீது கமல்கடுப்பில் இருக்கிறாராம்.

அத்தோடு சண்டியர் படப் பிரச்சினையின்போது ஜெயலலிதா கொடுத்த ஆதரவு, இப்போது மும்பை எக்ஸ்பிரஸ் பெயர் பிரச்சனையில்ஜெயலலிதா கொடுத்து ஆதரவு ஆகியவற்றால் ஜெயா டிவிக்கே படத்தைத் தர கமல் ஆர்வம் காட்டியிருக்கிறார்.


"விருமாண்டி"யையும், ஜெயாதான் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை எக்ஸ்பிரஸை முடித்துவிட்டு கமல் நடிக்கப் போவது ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் தயாரிக்கும் படத்தில். அதை இயக்குவதுகாக்க.. காக்க...இயக்குனர் கெளதம் மேனன்.

இதுவும் ஆக்ஷன் கலந்த படமாகத்தான் இருக்குமாம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil