»   »  வி.சிறுத்தைகள் மிரட்டலுக்கு இடையே வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விடுதலை சிறுத்தை தொண்டர்கள்பெரும் சர்ச்சைகளுக்கு இடையே மும்பை எக்ஸ்பிரஸ் படம் தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப்பட்டது.விழுப்புரம், பண்ருட்டி தவிர மற்ற இடங்களில் மும்பை எக்ஸ்பிரஸ் திட்டமிட்டபடி பெரும் பரபரப்புக்கிடையே ரிலீஸானது.படத்தின் பெயரை மாற்றாவிட்டால் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை திரையிட விட மாட்டோம் என தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், குறிப்பாக,அதில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு எச்சரித்திருந்தது.இதனால் மும்பை எஸ்பிரசும் விஜய்சின் சச்சினும் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. ஆனால், இந் நிலையில் இந்த இரு படங்களுமேதிட்டமிட்டபடி வெளியாயின.கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸை எதிர்த்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத் தொண்டர்கள் சுமார் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.சிறுத்தைகள்-ரசிகர்கள் மோதல்:சென்னை அபிராமி தியேட்டர் முன்பும், நங்கநல்லூரில் இந்தப் படம் வெளியான தியேட்டர் முன் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டத்தில்ஈடுபட்டனர். படத்தை பார்க்க வேண்டாம் என அங்கு வந்த பொது மக்களிடம் அவர்கள் கூறினர்.இதையடுத்து கமல் ரசிகர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் அடித்துக் கொள்ளும் சூழல்உருவானதையடுத்து வி.சிறுத்தை தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.சோடா பாட்டில் வீச்சு:ஈரோட்டில் இந்தப் படம் வெளியாக இருந்த தியேட்டருக்குள் சோடா பாட்டில் வீச்சு நடந்தது. இதில் திரை கிழிந்துவிட்டது. வேறு திரைமாற்றப்பட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது.விழுப்புரத்தில் ரிலீஸ் இல்லை:கமல் படம் ஓடும் தியேட்டருக்குபோடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு

வி.சிறுத்தைகள் மிரட்டலுக்கு இடையே வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விடுதலை சிறுத்தை தொண்டர்கள்பெரும் சர்ச்சைகளுக்கு இடையே மும்பை எக்ஸ்பிரஸ் படம் தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப்பட்டது.விழுப்புரம், பண்ருட்டி தவிர மற்ற இடங்களில் மும்பை எக்ஸ்பிரஸ் திட்டமிட்டபடி பெரும் பரபரப்புக்கிடையே ரிலீஸானது.படத்தின் பெயரை மாற்றாவிட்டால் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை திரையிட விட மாட்டோம் என தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், குறிப்பாக,அதில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு எச்சரித்திருந்தது.இதனால் மும்பை எஸ்பிரசும் விஜய்சின் சச்சினும் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. ஆனால், இந் நிலையில் இந்த இரு படங்களுமேதிட்டமிட்டபடி வெளியாயின.கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸை எதிர்த்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத் தொண்டர்கள் சுமார் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.சிறுத்தைகள்-ரசிகர்கள் மோதல்:சென்னை அபிராமி தியேட்டர் முன்பும், நங்கநல்லூரில் இந்தப் படம் வெளியான தியேட்டர் முன் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டத்தில்ஈடுபட்டனர். படத்தை பார்க்க வேண்டாம் என அங்கு வந்த பொது மக்களிடம் அவர்கள் கூறினர்.இதையடுத்து கமல் ரசிகர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் அடித்துக் கொள்ளும் சூழல்உருவானதையடுத்து வி.சிறுத்தை தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.சோடா பாட்டில் வீச்சு:ஈரோட்டில் இந்தப் படம் வெளியாக இருந்த தியேட்டருக்குள் சோடா பாட்டில் வீச்சு நடந்தது. இதில் திரை கிழிந்துவிட்டது. வேறு திரைமாற்றப்பட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது.விழுப்புரத்தில் ரிலீஸ் இல்லை:கமல் படம் ஓடும் தியேட்டருக்குபோடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil
போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விடுதலை சிறுத்தை தொண்டர்கள்

பெரும் சர்ச்சைகளுக்கு இடையே மும்பை எக்ஸ்பிரஸ் படம் தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப்பட்டது.

விழுப்புரம், பண்ருட்டி தவிர மற்ற இடங்களில் மும்பை எக்ஸ்பிரஸ் திட்டமிட்டபடி பெரும் பரபரப்புக்கிடையே ரிலீஸானது.

படத்தின் பெயரை மாற்றாவிட்டால் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை திரையிட விட மாட்டோம் என தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், குறிப்பாக,அதில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு எச்சரித்திருந்தது.

இதனால் மும்பை எஸ்பிரசும் விஜய்சின் சச்சினும் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. ஆனால், இந் நிலையில் இந்த இரு படங்களுமேதிட்டமிட்டபடி வெளியாயின.

கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸை எதிர்த்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத் தொண்டர்கள் சுமார் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுத்தைகள்-ரசிகர்கள் மோதல்:

சென்னை அபிராமி தியேட்டர் முன்பும், நங்கநல்லூரில் இந்தப் படம் வெளியான தியேட்டர் முன் விடுதலைச் சிறுத்தைகள் போராட்டத்தில்ஈடுபட்டனர். படத்தை பார்க்க வேண்டாம் என அங்கு வந்த பொது மக்களிடம் அவர்கள் கூறினர்.

இதையடுத்து கமல் ரசிகர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் அடித்துக் கொள்ளும் சூழல்உருவானதையடுத்து வி.சிறுத்தை தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

சோடா பாட்டில் வீச்சு:

ஈரோட்டில் இந்தப் படம் வெளியாக இருந்த தியேட்டருக்குள் சோடா பாட்டில் வீச்சு நடந்தது. இதில் திரை கிழிந்துவிட்டது. வேறு திரைமாற்றப்பட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

விழுப்புரத்தில் ரிலீஸ் இல்லை:

கமல் படம் ஓடும் தியேட்டருக்கு
போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு
விழுப்புரத்தில் நவநீதம் திரையரங்கில் வி.சிறுத்தைகள் மிரட்டலால் இந்தப் படம் வெளியாகவில்லை. இதற்குப் பதில் ஆதித்யா என்ற டப்பாபடம் திரையிடப்பட்டதால் கமல் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

அதே போல விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மகாலட்சுமி தியேட்டரிலும் மும்பை எக்ஸ்பிரஸ் திரையிடப்படவில்லை. அதற்குப்பதில் சச்சின் திரையிடப்பட்டது.

இதே போல பண்ருட்டியில் சரவணா தியேட்டர் நிர்வாகத்தினரை வி.சிறுத்தைகள் மிரட்டியதால் மும்பை எக்ஸ்பிரஸ் படம்திரையிடப்படவில்லை.

விழுப்புரத்தில் உள்ள கல்யாண் தியேட்டரில் மட்டும் அதிரடிப் படை போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் படம் வெளியிடப்பட்டது.

திரை கிழிப்பு:

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் ரிலீஸ் ஆன அம்பிகா தியேட்டரின் திரையை யாரோ விஷமிகள் இரவோடுஇரவாக கிழித்துவிட்டுச் சென்றுவிட்டனர். சுவர் ஏறிக் குதித்து இந்த கிழியலை செய்துவிட்டுத் தப்பியுள்ளனர்.

இதையடுத்து புதிய திரை பொருத்தப்பட்ட படம் வெளியானது. இந்த திரையரங்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் செங்குன்றம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த மும்பை எக்ஸ்பிரஸ் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு தீ வைக்கு எரிக்கப்பட்டிருந்தன.

தஞ்சையில் மோதல்:

தஞ்சாவூரில் மும்பை எக்ஸ்பிரஸை எதிர்த்து தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு படத்தின் டிஜிட்டல்போஸ்டர்களை அடித்து, உடைத்தனர். இதைத் தடுக்க வந்த கமல் ரசிகர்களுக்கும் பொதுவுடமைக் கட்சியினருக்கும் இடையே மோதல்உருவானது. இதையடுத்து கட்சியினர் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல விழுப்புரம், சிதம்பரம், பண்ருட்டி, கடலூர், பொள்ளாச்சி, கோவை திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் மும்பைஎக்ஸ்பிரஸ் பேனர்கள் உடைத்து எறியப்பட்டன. ஆனாலும் படம் ரிலீஸ் ஆனது.


Read more about: kamal, mumbai express, release

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil