»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறுநீரகக் கல் அடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கமலஹாசன், சிகிச்சைக்காக சென்னை போரூர்ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தன்னுடைய "ஆளவந்தான்" படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் கமல் ஈடுபட்டிருந்தார்.


இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அவர் வயிற்று வலியால் துன்பப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, அவர்வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

செவ்வாய்க்கிழமை காலை கமலுக்கு மீண்டும் வயிற்று வலி வந்தது. இந்த முறை வலி கடுமையாக இருக்கவே, அவர்உடனடியாக போரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவருடைய சிறுநீரகத்தில் ஒரு கல்அடைபட்டிருந்தது தெரிய வந்தது.

உடனே, லேசர் சிகிச்சை மூலம் அந்தக் கல் அகற்றப்பட்டது. ஆனாலும், சிகிச்சைக்காக தொடர்ந்து ஒரு சில நாட்கள்மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

இதனால், "ஆளவந்தான்" இறுதிக்கட்ட டப்பிங் கவலைகளில் இருந்து, தற்காலிகமாக விடுபட்டு,மருத்துவமனையிலேயே ஓய்வெடுத்து வருகிறார் கமல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil