Don't Miss!
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் குழும நிறுவனங்கள்.. எவ்வளவு லாபம் தெரியுமா?
- News
பெருவாரிப்பேர் இன்று ‘சிக் லீவ்’ எடுத்திருப்பாங்க! பின்னே.. இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா.. விடுவோமா?
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கமலுக்கு கொரோனா...மருத்துவனையில் தனிமையில் உள்ளார்
சென்னை : கமல் தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நான்காம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நவம்பர் 17 ம் தேதி கோவையில் துவங்கி வருகிறார்.
Recommended Video
இந்த
படத்துக்கு
ஏன்
சபாபதி
டைட்டில்
வச்சோம்?
மனம்
திறக்கும்
சபாபதி
இயக்குனர்
!
ஒரு மாதம் நடைபெறும் இந்த படப்பிடிப்புடன் விக்ரம் படத்தின் ஷுட்டிங் நிறைவடைய உள்ளது. இதில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஜனவரி வரை பிக்பாஸ்
இதற்கிடையில் விஜய் டிவியில் அக்டோபர் 3 ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய நான்கு சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். தற்போதைய சீசன் ஜனவரி மாதம் வரை நடைபெற உள்ளது.

தொகுத்து வழங்கும் கமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கமல் வரும் எபிசோட் ஒளிபரப்பப்படுகிறது. இதில் அந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கும் நடந்த பிரச்சனைகள் ஆகியவை பற்றி பேசி, அந்த வாரத்தில் வெளியேற போகிறவர் யார், காப்பாற்றப்பட்டது யார் என்பதை கமல் அறிவிப்பார்.

சிகாகோ சென்ற கமல்
இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன் கமல் சிகாகோ சென்றிருந்த ஃபோட்டோக்கள் வெளியாகின. அங்கு கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதனால் இந்த வார இறுதி எபிசோட்களை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என தகவல் பரவியது. இதை குறிப்பிட்டு நேற்றை பிக்பாஸ் எபிசோடில் பேசினார் கமல்.

கடமை தவற மாட்டேன்
அப்போது, அது வெளியூர். இது தான் என்னுடைய வீடு. வீட்டிற்கு திரும்பி வந்து தானே ஆக வேண்டும். நான் இதுவரை எனது பணியில் சரியாக இருந்துள்ளேன். ஒரு போதும் கடமை தவறியதில்லை. இனியும் கடமை தவற மாட்டேன் என நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே பேசினார். தனது கதர் நிறுவனம் பற்றியும் விளக்கி சொன்னார்.

கொரோனா தொற்று
இந்நிலையில் இன்று தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கமல் ட்வீட் செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கமல் தனது ட்வீட்டில், அமெரிக்கா பயணம் சென்று திரும்பியது முதல் லேசான இருமல் இருந்து வந்தது. பரிசோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னும் கொரோனா போகவில்லை என்பது உறுதியாகி உள்ளது. கவனமாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
இதை பார்த்த கமலின் ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கமல் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.