»   »  2015ல் கலக்க வரும் கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா படங்கள்

2015ல் கலக்க வரும் கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015ம் ஆண்டில் ரசிகர்களை மகிழ்விக்க அஜீத், விஜய், விக்ரம் படங்கள் வெளியாக உள்ளன.

2014ம் ஆண்டில் வெளியான விஜய்யின் கத்தி, அஜீத்தின் வீரம், தனுஷின் வேலையில்லா பட்டதாரி ஆகியவை ஹிட்டாகின. இது தவிர்த்து பேய் படங்களும் நல்ல வசூல் செய்தன.

இந்த ஆண்டும் பாக்ஸ் ஆபீஸில் கலக்க பல படங்கள் காத்திருக்கின்றன. அவை பற்றிய விவரம் வருமாறு,

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள என்னை அறிந்தால் வரும் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. அஜீத், கௌதம் மேனன் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள ஐ படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாஸ்

மாஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடித்து வரும் மாஸ் படம் இந்த ஆண்டு ரிலீஸாகிறது. ஆதவன் படத்தை அடுத்து சூர்யா மாஸ் படம் மூலம் மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் டீஸர் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையுமாம். படம் தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஏப்ரல் மாதம் ரிலீஸாகும்.

உத்தம வில்லன்

உத்தம வில்லன்

கமல் ஹாஸனின் உத்தம வில்லன், பாபநாசம் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய 3 படங்கள் இந்த ஆண்டு ரிலீஸாகின்றன. மூன்று படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இதில் உத்தம வில்லன் தான் முதலில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

புலி

புலி

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்து வரும் புலி படம் தீபாவளி பண்டிகையொட்டி ரிலீஸாக உள்ளது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தல 56

தல 56

வீரம் படத்தை அடுத்து மீண்டும் சிவா, அஜீத் இணையும் படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்த பிறகு துவங்க உள்ளது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று தெரிகிறது.

அனேகன்

அனேகன்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அனேகன் படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

10 எண்றதுக்குள்ள

10 எண்றதுக்குள்ள

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படமும் இந்த ஆண்டு தான் ரிலீஸாகிறது.

கொம்பன்

கொம்பன்

சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, ரஜினி முருகன், கார்த்தியின் கொம்பன், விஷாலின் ஆம்பள, தனுஷின் மாரி, மணிரத்னத்தின் ஓகே கண்மணி உள்ளிட்ட படங்களும் இந்த ஆண்டில் வெளியாக உள்ளன.

English summary
Ajith's Yennai Arindhaal, Vikram I, Vijay's Puli, Suriya's Masss, Kamal Haasan's Papanasam, Uthama Villain, Vishwaroopam 2 are getting ready to entertain audience this year.
Please Wait while comments are loading...