»   »  கமல் - அமலாவின் 'அம்மா அப்பா விளையாட்டு'... இதென்ன கலாட்டா!!

கமல் - அமலாவின் 'அம்மா அப்பா விளையாட்டு'... இதென்ன கலாட்டா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இது யாரையும் 'மிஸ்லீட்' பண்ண வைக்கப்பட்ட செய்தித் தலைப்பு அல்ல.. நிசமாகவே கமலும் அமலாவும் நடிக்கும் புதிய படத்துக்காக வைக்கப்பட்டுள்ள தலைப்பு ஒன்றின் தமிழாக்கம்.

சத்யா, வெற்றி விழா போன்ற படங்களுக்குப் பிறகு கமல் ஹாஸனும் அமலாவும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்கள் அல்லவா... இந்தப் படத்துக்குதான் தெலுங்கில் அப்பா அம்மா விளையாட்டு என்ற பொருள் வரும் வகையில் அம்மா நானா ஆட்டா என்று தலைப்பிட்டுள்ளனர்.

Kamal - Amala's movie title Amma Nana Aaatta

தமிழில் இதே தலைப்பை வைப்பார்களா? சந்தேகம்தான்.

கான்ட்ராவர்சி எதுவுமில்லாததாலோ என்னமோ கமலின் கடந்த இரு படங்களுமே சுமாராகத்தான் போயின. அந்தக் குறையை ஈடுகட்ட ஒருவேளை பெரும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் இதே தலைப்பை வைத்துவிடுவார்களோ?

குறிப்பு: அம்மா அப்பா விளையாட்டு என்ற தலைப்பு தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே பாண்டியராஜன் - ரஞ்சிதாவை வைத்து பாலு மகேந்திரா எடுக்கவிருந்த ஒரு படத்துக்கு இந்தத் தலைப்பைச் சூட்டியுள்ளார். இசைத்தட்டு மட்டும் வந்தது. படம் வெளியாகவில்லை!

English summary
Kamal Hassan - Amala starring movie has been titled Amma Nana Aatta in Telugu. The Tamil title yet to be announced.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil