ஒரே படத்தில் இணையும் கமல், சூர்யா... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சென்னை : நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், அரசியல்வாதி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு பல முகங்களைக் கொண்டவர் கமல். சமீபத்தில் தனது திரையுலக பயணத்தில் 62 ஆண்டுகளை அவர் நிறைவு செய்தார்.

சிவாஜிக்கு பிறகு நடிப்பென்றாலே அது கமல் தான் எனும் அளவிற்கு இந்திய சினிமாவில் தனது பங்களிப்பை முழுவதுமாக கொடுத்தவர். பலருக்கு நடிப்பில் குருவாக இருப்பவர் கமல். பல புதுமைகளையும், நுணுக்கங்களையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல் தான்.

தேர்தலுக்கு பின் பிஸியான கமல்

தேர்தலுக்கு பின் பிஸியான கமல்

தமிழக தேர்தலுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கி உள்ள கமல், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஏற்கனவே பாதியில் நிற்கும் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் ஏற்கனவே கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது.

பாபநாசம் 2 எப்போ

பாபநாசம் 2 எப்போ

அதற்கு முன் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் 2 தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 வேலைகளை எப்போது துவக்கலாம் என டைரக்டர் ஜீத்து ஜோசப் கமலுடன் பேசி வருகிறார். பாபநாசம் 2 லும் கமலுக்கு ஜோடியாக கவுதமியை நடிக்க வைக்க ஜீத்து ஜோசப் நினைக்கிறார். ஆனால் கமல், கவுதமிக்கு நோ சொல்லி விட்டதால் மீனா அல்லது நதியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஒரே படத்தில் கமல், சூர்யா

ஒரே படத்தில் கமல், சூர்யா

கமலை போன்று தான் நடிக்கும் படங்களின் கேரக்டர்களுக்காக கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் மெனக்கெடக் கூடியவர் சூர்யா. இவர் கமலை தனது திரையுலக குரு என பல முறை கூறி உள்ளார். தற்போது கமலும், சூர்யாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க போகிறார்களாம். இதனால் இந்த இரு மாஸ் ஹீரோக்களையும் ஒன்றாக திரையில் பார்க்க இருவரின் ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றன.

இவர் தான் டைரக்டரா

இவர் தான் டைரக்டரா

பிரபல மலையாள ஒளிப்பதிவாளரும் டைரக்டருமான அமல் நீரத், சமீபத்தில் ஏசியாநெட் டிவி.,க்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். கமல் மற்றும் சூர்யாவை மனதில் வைத்து புதிய கதை ஒன்றை இவர் உருவாக்கி வருகிறாராம். இது பற்றி கமல் மற்றும் சூர்யாவிடம் அவர் கூறினாராம். அதற்கு இரண்டு மாஸ் ஹீரோக்களும் க்ரீன் சிக்னல் காட்டி விட்டார்களாம். அதனால் கதையை தயார் செய்யும் வேலையை சீரியசாக செய்து வருகிறாராம் அமல்.

 தேவர்மகன் 2

தேவர்மகன் 2

இந்த கதை முடிவடையும் நிலையில் உள்ளதாம். கதையை தயார் செய்து முடித்த உடன் கமல் மற்றும் சூர்யாவை சந்தித்து முழு கதையையும் சொல்ல திட்டமிட்டுள்ளாராம். இருவரும் கதைக்கு ஓகே சொல்லி விட்டால் படத்தின் வேலைகளை உடனடியாக துவக்கவும் அமல் திட்டமிட்டுள்ளாராம். இது தேவர்மகன் 2 ஆக கூட இருக்கலாம் என்ற தகவலும் கூறப்படுகிறது.

எல்லோருமே பிஸி

எல்லோருமே பிஸி

அமல் நீரத், அடுத்ததாக மம்முட்டியை வைத்து பீஷ்மா பர்வம் என்ற படத்தை எடுக்க உள்ளார். மம்முட்டி நடித்த பிளாக் படத்தின் அடுத்த பாகமாக பைலல் படத்தை இயக்கவும் அமல் திட்டமிட்டுள்ளாராம். கமல், சூர்யா இருவருமே தங்களின் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் அவற்றை முடித்ததும் இந்த புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் அமல்.

செப்டம்பரில் வாடிவாசல்

செப்டம்பரில் வாடிவாசல்

எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிற்கும் வாடிவாசல் படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் மாதம் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் கமல், சூர்யா

காரைக்குடியில் கமல், சூர்யா

சூர்யா தற்போது டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஷுட்டிங்கிற்காக காரைக்குடியில் இருந்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கமலும் விக்ரம் படத்தின் ஷுட்டிங்காக காரைக்குடியில் தான் இருந்து வருகிறார். இந்த வார இறுதியில் விக்ரம் படத்தின் ஷுட்டிங் துவக்கப்படலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X