twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிரூப் ஒரு ஹ்யுமனாய்டு ரோபோ... மீண்டும் அபிஷேக்கிடம் ரெவ்யூ கேட்ட கமல்

    |

    சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 வது நாளை எட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே அதிகம் விமர்சிக்கப்பட்டதும், அதிகம் வெறுப்பை சம்பாதித்ததும், கன்டென்ட் கொடுத்ததும் அபிஷேக் ராஜா தான். வீட்டிற்குள்ளும் சரி, வீட்டிற்கு வெளியிலும் சரி அதிகமானவர்களிடம் வெறுப்பை சம்பாதித்தார்.

    21 வது நாளில் எலிமினேட் செய்யப்பட்டு, வெளியேற்றப்பட்ட அபிஷேக், நிகழ்ச்சியின் 47 வது நாளில் வைல்கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார். இவரின் ரீஎன்ட்ரி பலருக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் கொடுத்துள்ளது.

    அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும் விஜய் டிவி அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும் விஜய் டிவி

    பிரபல யூட்யூப்பரான அபிஷேக், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இரண்டாவது நாளே வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்கள் அனைவரை பற்றியும் ரெவ்யூ கொடுத்தார். முதல் வார இறுதியில் வந்த கமலும் போட்டியாளர்கள் பற்றி ரெக்யூ சொல்லும் படி கேட்டார். இது பலரையும் ரசிக்க வைத்தது. இதை வைத்தே கமலும் அபிஷேக்கை கலாய்த்தார். இதையும் ரசிகர்கள் ரசித்தனர்.

    மீண்டும் ரெவ்யூ கேட்ட கமல்

    மீண்டும் ரெவ்யூ கேட்ட கமல்

    இந்நிலையில் 49 வது நாளான இன்றும் அபிஷேக்கிடம் மீண்டும் ரெவ்யூ கேட்டார் கமல். இந்த வாரம் 9 பேர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், பாவ்னியை நேற்றே காப்பாற்றியதாக அறிவித்தார் கமல். இந்நிலையில் மீதமுள்ள 8 பேரில் முதலில் காப்பாற்றப்பட போவது யார் என அபிஷேக்கை சொல்லும்படி சொன்னார் கமல். முன்பு ஒரு முறை ரெவ்யூ கொடுத்தீர்கள். இப்போது வெளியே சென்று விட்டு வந்த பிறகு அந்த கருத்து மாறி உள்ளதா என கேட்டார்.

    நாமினேட் ஆன 8 பேர்

    நாமினேட் ஆன 8 பேர்

    நாமினேஷனில் இருக்கும் 8 பேர் பற்றி ரெவ்யூ கொடுக்குடி கூறினார் கமல். அதற்கு அபிஷேக், அபினய்யிடம் இருந்து தனது ரெவ்யூவை சொல்ல துவங்கினார். அபினய்யிடம் பல முறை சொல்லி இருக்கிறேன். நீ என்ன விளையாடுகிறாய். கடைசி வரை ஒரு டோர்மேட் ஆக, பிளாங்கெட்டாக மற்றவர்களுக்காக தான் இதுவரை வாழ்ந்துள்ளாய். உனக்காக கொஞ்சம் விளையாடு என்று சொன்னேன். பாதி கடலில் அலைக்கே அவரை பிடித்திருக்கிறது போல. அதுவே அவரை கரைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.

    நிரூப் ஹ்யுமனாய்டு ரோபோ

    நிரூப் ஹ்யுமனாய்டு ரோபோ

    பிரியங்கானாலே இந்த ஷோவை பொருத்தவரை பூவும், நாறுமாக நாங்க இருக்க நினைத்தோம். இப்பவும் நாறாகவே இருக்கவே நான் நினைக்கிறேன். இப்படியே கடைசி வரை இருக்க நான் நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம் என சொல்லும் போது சின்ன கர்வமும் உள்ளது. நிரூப், புதிதாக இவனை வைத்து ஒரு கான்செப்ட் செய்துள்ளோம். ராஜுவும் நானும் சேர்ந்து உருவாக்கிய ஹ்யமனாய்டு ரோபோ என விளையாட்டாக சொன்னேன். இந்த சீசனை வெல்லக் கூடியே, சீசனை வெல்ல வாய்ப்புள்ள, தகுதியுடையவன் அவன்.

    பெரியப்பா மாதிரி அண்ணாச்சி

    பெரியப்பா மாதிரி அண்ணாச்சி

    அண்ணாச்சி, நான் ஸ்டார்டிங்கில சொன்னது தான். வீட்டில ஒரு பெரியப்பா இருப்பார்கள. அது போலதான் அவர். பத்து விஷயம் சொன்னா ஒரு விஷயம் தப்பா இருக்கும். அது நாலு விஷயம் நமக்கு கடுப்பாக தான் செய்யும். அது கரெக்டாகவும் இருக்கும். இருந்தாலும் நான் மாறவே மாட்டேன். சொல்லிகிட்டே தான் இருப்பேன்டா என அடம்பிடிச்சு இருப்பவர் அவர்.

    ஹானஸ்ட்ராஜ் பார்ட் 2 ஹீரோ

    ஹானஸ்ட்ராஜ் பார்ட் 2 ஹீரோ

    தாமரைசெல்வி, ஹீரோ - வில்லன் என இரண்டு முகங்கள் கலந்து இருப்பவர். அதுனால அவ இங்க ஒரு பேசு பொருளாக இருக்கா. சிபி, ஹானஸ்ட்ராஜ் பார்ட் 2 ஹீரோ அவர் தான். அவனுடைய ஒழுக்கம், நேர்மை அவனை காட்டுது. இனியும் அப்படி தான் இருப்பான். அவனிடம் எனக்கு பிடித்ததே இது தான். நேர்பட பேசுவது. நேர்பட பேசுவதும் எப்போது பேச வேண்டும் என தெரிந்து பேசக் கூடியவன். மிஸ்டர் ஹானஸ்ட் அவர் தான்.

     மீட்டர் வைத்திருக்கும் ராஜு

    மீட்டர் வைத்திருக்கும் ராஜு

    ராஜு எப்போதும் எனக்கு வியப்பை தரக் கூடியவன். சக கலைஞன். நடிகருக்கு சொல்லப்படும் இவ்வளவு தான் சிரிக்க வேண்டும், இவ்வளவு தான் அழ வேண்டும் என மீட்டர் உள்ளது. அதே போல் இங்கு, அவனுடைய கேரக்டருக்கு ஒரு மீட்டர் வைத்துள்ளான். அதை இந்த ஷோவிலும் பிடித்து டிராவல் பண்ணுறான். அது நிறைய பேரால முடியாது.

    நான் எனக்காக தான் செய்வேன்

    நான் எனக்காக தான் செய்வேன்

    வருண், நானும் அவனும் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்து ஒன்பதாம் வகுப்பில் டிரான்ஸ்ஃபர் வாங்கி, காணாமல் போனவன் போல தான் வெளிய போனவனாக தான் நான் பார்த்தேன். அவன்கிட்ட எனக்கு பிடித்ததே, நைட் 12 மணிக்கு சுடுகாட்டிற்கு போகனும்னா போவேன். அது என்னை தைரியமானவன் என உலகிற்கு காட்டுவதற்காக இல்லை. நான் காற்று வாங்க கூட போவேன். ஆனால் எனக்காக சில விஷயம் பண்ணனும் என நினைப்பவன்.

    சிலபஸ் தெரிந்த அக்ஷரா

    சிலபஸ் தெரிந்த அக்ஷரா

    அக்ஷரா ஆரம்பம் முதலே எனக்கு சஸ்பென்ஸ் த்ரில்லர் தான். இவளுக்கு பெரிதாக புரிதல் இல்லை. பாவம் இது குழந்தை. இதற்கு கேம் புரியவில்லை. வசதியான குடும்பத்தில் பிறந்த பொண்ணு போல என நினைத்தேன். ஆனால் என்னை விட அதிக நாட்கள் இங்கு இருந்திருக்கிறாள் என்பதில் இருந்தே, அவளுக்கு அதிக சிலபஸ் தெரிந்திருக்கிறது என்று தான் அர்த்தம் என்கிறார் அபிஷேக். விமர்சித்த வார்த்தை பிரயோகங்களில் நல்ல மாற்றம், முதிர்வு தெரிகிறது என கமலும் அபிஷேக் பாராட்டினார்.

    English summary
    Kamal asked to abhishek raaja that review about nominated contestants. abishek gave review with funny way. housemates enjoyed his speech. kamal also appreciate his way of review with maturity words.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X