Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இந்த சீசன் எப்படி இருக்கு...பார்வையாளர்களிடம் கருத்து கேட்ட கமல்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஏழாவது வாரத்தின் இறுதிப்பகுதியை எட்டி உள்ளது. இந்த வாரம் வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 100 நாட்களை கொண்ட இந்த நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை நெருங்கி வருகிறது.
பாலா இயக்கத்தில் ரெட்டை வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த வார தலைவராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் பாத்ரூம் ஏரியா ஆளுமை வருணுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிரூப் தினம் ஒருவருடன் சண்டை போடுவதை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி போகி உள்ளனர்.

இந்த வார எவிக்ஷன்
இந்த வாரம் அபினய், அக்ஷரா, சிபி, இமான் அண்ணாச்சி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, நிரூப், பாவனி, தாமரை ஆகிய ஒன்பது பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மக்களின் குறைவான ஓட்டுக்களைப் பெற்று இசைவாணி தான் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அபிஷேக்கின் ரீஎன்ட்ரி
இந்த வாரம் நடைபெற்ற பிரச்சனைகள், சண்டைகள் குறித்து வார இறுதி எபிசோட்டின் முதல் நாளான இன்று கமல் பேச உள்ளார். ஹவுஸ்மேட்கள் இடையே உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க உள்ளார். இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் ப்ரோமோவில் வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் அபிஷேக் ராஜா, பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்.

அன்பை பொழியும் பிரியங்கா
அபிஷேக்கை பார்த்த பிரியங்கா, ராஜு, நிரூப், தாமரை போன்றோர் சென்று கட்டிப்பிடித்து அன்பை பொழிகிறார்கள். அப்போது ராஜு, நேற்று தான் உன் ஃபிரண்ட் உடன் க்ளோஸ் ஆனேன். நேற்று இரவு தான் பேசி சமாதானம் ஆனோம். அதற்குள் வந்து விட்டாய் என்கிறார் அபிஷேக்கிடம். இதை கேட்டு மற்றவர்கள் சிரித்து கிண்டல் செய்கிறார்கள். பிரியங்கா, ராஜுவை கட்டிப்பிடித்து சமாதானம் ஆகிறார்.

இந்த சீசன் எப்படி இருக்கு
இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் கமல், இந்த நிகழ்ச்சி 50 வது நாளை நெருங்கி உள்ளது. உங்களின் கணிப்பில் இந்த சீசன் எப்படி இருக்கிறது என பார்வையாளர்களை பார்த்து கேட்கிறார். அதற்கு ஒருவர், ராஜு டஃப் கன்டஸ்டன்ட்டாக இருக்கிறார் என்கிறார். மற்றொருவர் ஆண்கள் எல்லோருமே கடும் போட்டியாளர்களாக உள்ளனர் என்கிறார்.

அபிஷேக் இல்லாத பிரியங்கா
மற்றொருவர், அபிஷேக் வருவதற்கு முன்பிருந்த பிரியங்கா நன்றாக விளையாடினார் என்கிறார். அதற்கு கமல், அவர் வந்து இப்போது தானே ஒரு நாள் ஆகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என முடிக்கிறார் கமல். வீட்டிற்குள் அபிஷேக்கை கட்டிப்பிடித்து சிரிக்கிறார் பிரியங்கா.

அபிஷேக்கை வெறுக்கும் ரசிகர்கள்
இதை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் 3 வனிதா ரீஎன்ட்ரி. பிக்பாஸ் 5 அபிஷேக் ரீஎன்ட்ரி. வேற யாரையாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக கொண்டு வந்திருக்கலாம். அபிஷேக் எரிச்சலடைய வைக்கும் நபர் என அபிஷேக் ராஜாவின் வைல்ட்கார்டு என்ட்ரிக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video

கலாய்த்த நெட்டிசன்கள்
அதே சமயம், எத்தனை நாளைக்கு தான் பிக்பாசே கன்டென்ட் கொடுத்துட்டு இருப்பார். அது தான் கன்டென்ட் புக்கையே உள்ளே அனுப்பி வைத்து விட்டார் என கலாய்த்து வருகின்றனர். அபிஷேக் வரதுக்கு முன்னாடி பிரியங்காவின் கேம் நன்றாக இருந்தது. இனி அவரின் கேம் கண்டிப்பா மாறும். 50 நாட்கள் முடிவடைந்து விட்டது. ஆனால் இந்த சீசன் சிம்ப்ளி வேஸ்ட் என ஏராளமானோர் தெரிவித்துள்ளனர்.