»   »  கமலின் ஐடியாலஜி இதுதானா..? - பாரதி புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் குறியீடுகள்!

கமலின் ஐடியாலஜி இதுதானா..? - பாரதி புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் குறியீடுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாரதி போல் தனது ப்ரொபைல் மாற்றிய கமல்- வீடியோ

சென்னை : கமல் நேற்று பாரதியார் போன்று தான் தோற்றமளிக்கும் ஒரு மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதையே தனது ப்ரொஃபைல் பிக்சராகவும் வைத்துள்ளார்.

கமல், பாரதி போல முண்டாசு கட்டி முறுக்கு மீசையுடன் கமல் கோபமாகக் காட்சி அளிக்கிறார். இந்தப் புகைப்படத்தில் கமல் தன்னை பாரதியாராகச் சித்தரித்துள்ளார்.

கமல் பாரதியைப் போல காட்சியளிக்கும் இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறியீடுகள்

குறியீடுகள்

கமல்ஹாசன், பாரதியைப் போல தோற்றமளிக்கும் இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குறியீடுகளைக் கண்டுபிடித்து, அதற்கு விளக்கம் கூறி வருகிறார்கள் வலைஞர்கள். கமலின் கருத்தியல்களை இந்த ஒற்றைப் புகைப்படம் விளக்குவதாகக் கூறியுள்ளார்கள் அவர்கள்.

கமலின் கொள்கை

கமலின் கொள்கை

கமல் சில நாட்களுக்கு முன்பு எனது கருப்புச் சட்டையில் சிறிது காவியும் கலந்திருக்கிறது எனக் கூறினார். கம்யூனிசமும், திராவிடமும் கலந்ததுதான் கமலின் கருத்தியல் எனக் கூறப்படுவதும் உண்டு. கமல் பேசுவதும் கிட்டத்தட்ட எனது சித்தாந்தம் அப்படித்தான் என ஒப்புக்கொள்வது போல இருக்கும்.

நான்கு இசங்கள்

தலையில் கட்டியிருக்கும் கருப்பு முண்டாசு திராவிடத்தையும், முகத்தில் பரவியிருக்கும் நீல நிறம் தலித்திஸத்தையும், கழுத்தில் சுற்றியிருக்கும் வெள்ளைத் துணி காந்தியத்தையும், பின்னணியில் இருக்கும் சிவப்பு கம்யூனிஸத்தையும் குறிக்கிறது என கமலின் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

நீலமும் சிவப்பும்

புகைப்படத்தில் பெரும்பான்மையாக இருக்கும் நிறங்கள் நீலம் மற்றும் சிவப்பு. சிவப்பு நிறம் : அநீதிகளுக்கு எதிரான கோபத்தையும், நீல நிறம் : உண்மை - நம்பிக்கை - விசுவாசம் - புத்திக்கூர்மை - உறுதிப்பாடு ஆகியவற்றை உணர்த்துவதாகவும் 'ஆண்டவர்' ரசிகர்கள் விளக்கம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

English summary
Kamalhaasan has posted a morphing photo of Bharatiyar on Twitter yesterday. With the colors found in this photo, netizens finds the ideologies of Kamalhaasan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil