பிக்பாஸில் பிறந்தநாள் கொண்டாடிய கமல்...கேக், சோறு கேட்டு கோரஸ் பாடிய ஹவுஸ்மேட்ஸ்
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தின் நிறைவுப்பகுதியை எட்டி உள்ளது. அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 35 நாட்களை கடந்து வந்துள்ளது.
வார இறுதியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் வரும் எபிசோட்கள் ஒளிபரப்பாகிறது. இதில் ஐந்தாவது வாரத்தின் கடைசி நாளும், ஞாயிற்றுக்கிழமையுமான இன்று, இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்பதை கமல் அறிவிக்க உள்ளார். பெரும்பாலான தகவல்கள் சுருதி வெளியேற போவதை உறுதி செய்துள்ளன.

எவிக்ஷன் உண்டு
ஏற்கனவே 4 பேர் வெளியேறி உள்ள நிலையில் இந்த வாரம் தீபாவளி என்பதால் எவிக்ஷன் இருக்காது என சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவியது. ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக எவிக்ஷன் உண்டு என கமல் நேற்றைய ப்ரோமோவிலேயே உறுதியாக தெரிவித்து விட்டார். இதனால் வெளியேற போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காப்பாற்றப்பட்ட இருவர்
நவம்பர் 7 ம் தேதியான இன்று கமலின் பிறந்தநாள் என்பதால் இதனை முன்னிட்டு இந்த வாரம் எவிக்ஷன் வேண்டாம் என கமலிடமே கேட்டார் பிரியங்கா. ஆனால் அது முடியாது என மறுத்து விட்ட கமல், இந்த வாரம் நாமினேட் ஆன 9 பேரில் நிரூப் மற்றும் இசைவாணி ஆகியோர் காப்பாற்றப்படுவதாக தெரிவித்தார். இந்த வாரம் யார் வெளியேறுவார் என நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு வீட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் சுருதி மற்றும் அபிநய்யின் பெயரை கூறினர்.

கமல் பிறந்தநாள்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 35 வது நாளான இன்றைய எபிசோடிற்கான முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், கமல் வரும் போது பார்வையாளர்கள், போட்டியாளர்கள் என அனைவரும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடுகிறார்கள். பிறகு கமல் போல் வேஷ்டி சட்டை கெட்அப்பில் இருந்த பிரியங்கா பேசுகையில், எல்லோர் வீட்டிற்குள்ளும் புகுந்து, எங்கள் மனதில் நீங்கள் நீங்காத இடம் பிடித்து விட்டீர்கள். ரொம்ப ஜாஸ்தியா இடம் பிடித்து விட்டீர்கள் என்கிறார்.

கோரஸ் பாடிய ஹவுஸ்மேட்ஸ்
நன்றி. உங்கள் அன்பிற்கு என்றும் நான் தலை வணங்குகிறேன் என்கிறார் கமல். அவரின் முன் ஹேப்பி பர்த்டே கமல் சார் என எழுதப்பட்ட பெரிய கேக் வைக்கப்பட்டுள்ளது. அப்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து கோரசாக, கேக்க கொஞ்சம் உள்ளே அனுப்புங்க சார். சோறு இருந்தா கொஞ்சம் அனுப்புங்க சார். கொஞ்சம்னா கொஞ்சம் இல்லைங்க சார். இங்க மொத்தம் நாங்கள் 14 பேர் இருக்கோங்க சார் என விரும்மாண்டி படத்தில் வரும் உன்னை விட பாடல் ராகத்தில் பாடுகிறார்கள்.

சோறு தான் முக்கியம்
இந்த ப்ரோமோ கமலை மட்டுமல்ல பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. இதை பார்த்து விட்டு ரசிகர்கள் பலர், சோறு சோறு சோறு சாமியோவ். சோத்துக்கு செத்தவனுங்க. பிரியங்கா அண்டா சோறு திண்ணாலுள் உனக்கு பத்தாதே. நமக்கு சோறு தான் முக்கியம். பிரியங்காவுக்காக தான் பிக்பாஸ் பார்க்குறோம். எப்போ பார்த்தாலும் சோறு சோறு சோறு தானா என கமெண்ட் செய்துள்ளனர்.

சுருதியை வெளியேற்ற எதிர்ப்பு
ஏராளமானோர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் சுருதி வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளனர். சுருதி ஸ்டிராங் கன்டெஸ்டன்ட் எதற்காக எவிக்ட் பண்ணுறீங்க என கேட்டுள்ளனர். அவரை வெளியேற்றுவது நியாயம் இல்லாத ஒன்றும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











