ஆண்டவரே சொல்லிட்டார் எவிக்ஷன் உண்டு...இந்த வாரம் வெளியேற போகிறவர் இவரா?
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக 34 வது நாளை எட்டி உள்ளது. ஐந்து வாரங்கள் நிறைவடைய போகும் நிலையில் இதுவரை 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐந்தாவதாக வெளியேற போகிறவர் யார் என்பது இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.
ஐந்தாவது வாரத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீட்டில் உள்ளவர்களை பார்க்க மாகாபா ஆனந்த், மதுரை முத்து, வெட்டுக்கிளி பாலா உள்ளிட்டோர் கெஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். அதைத் தொடர்ந்து கேப்டன்சி டாஸ்கிற்காக வீட்டில் உள்ளவர்களுக்குள் அடிதடி சண்டை நடைபெற்றது.

எவிக்ஷன் உண்டு
இந்நிலையில் இந்த வாரம் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் தீபாவளி என்பதால் எவிக்ஷன் இருக்காது என ஒரு கருத்து பரவியது. இந்நிலையில், இது உண்மையல்ல. இந்த வாரம் கண்டிப்பாக எவிக்ஷன் உண்டு என இன்றைய எபிசோடிற்காக வெளியிடப்பட்ட முதல் ப்ரோமோவிலேயே கமல் தெளிவாக கூறி விட்டார்.

கமல் என்ன பேசுவார்
இன்றைய சனிக்கிழமை எபிசோட்டில் காப்பாற்றப்பட போகிறவர்கள் யார் என்பதை கமல் அறிவிக்க உள்ளார். அதே போல் இந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் கமல் பேச உள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தின் போது போட்டியாளர்கள் அனைவருக்கும் அவரவர் வீட்டில் இருந்து வந்த உணவு வழங்கப்பட்டு, ஏவி காண்பிக்கப்பட்டது. இதை பார்த்து அனைவரும் கண்ணீர் விட்டனர்.

வெளியேற போகிறவர் யார்
இந்நிலையில் இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. லேட்டஸ்ட் தகவலின் படி மிக குறைந்த ஓட்டுக்களை வாங்கி அபினய் மற்றும் சுருதி ஆகியோர் டேஞ்சர் ஜோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்பட போகிறார் என கூறப்படுகிறது.

இவர் தான் போக போகிறாரா
கடந்த வாரம் சுருதி காப்பாற்றப்பட்டாலும், பாவனியின் உதவியுடன் தாமரையின் காயினை அவர் திருடிய பிறகு அவருக்கு பதிவனான ஓட்டுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதாம். அதனால் இந்த வாரம் சுருதி வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குறைந்த ஓட்டுக்கள்
எவிக்ஷனில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், மற்றவர்களை நாமினேட் செய்து வெளியேற்றவுமே சுருதி காயினை கைப்பற்றியதாக கூறினார். கடந்த வாரம் பாவனி மற்றும் சுருதியை கமல் மிக கடுமையாக திட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிக சுமூகமாக இந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார் கமல். ஆனால் கமல் அப்படி பேசியதால் அதற்கு பிறகு தான் செய்தது சரி தான் என்பது போல் சுருதியின் நடவடிக்கை இருந்தது. சுருதியின் இந்த நடவடிக்கை தான் அவருக்கு ஓட்டுக்கள் குறைய காரணம் என கூறப்படுகிறது.

நடிப்பால் அதிகரித்த ஓட்டு
அதே சமயம் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து டேஞ்சர் ஜோனிற்கு சென்று, கடைசி நிமிடத்திலேயே காப்பாற்றப்பட்டு வருகிறார் அபினய். இந்த வாரம் சினிமா சினிமா டாஸ்க்கில் அவர், தெய்வ திருமகள் விக்ரம் போலவே அழகாக நடித்தது போன்ற சில செயல்பாடுகளை ரசிகர்களை கவர்ந்துள்ளதால், அவருக்கு ஓட்டுக்கள் சற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











