அக்ஷராவிற்கும் பாவனிக்கும் என்ன தான் பிரச்சனை... குழம்பிப் போன கமல்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 20 வது நாளான இன்று, கடந்த வாரத்தில் டாஸ்கின் போது நடைபெற்ற பல்வேறு விவகாரங்கள், குழப்பங்கள் பற்றி கமல் பேசினார். வழக்கமாக வேறு ஏதாவது விஷயங்கள் பற்றி பேசி விட்டு, பிறகு பிரச்சனை, பஞ்சாயத்து, கண்டிப்பு என செல்வார் கமல்.

ஆனால் இன்று வந்ததும் நேரடியாக பிரச்சனைகளை பேச துவங்கி விட்டார். அது சோஷியல் மீடியாவில் அதிக அளவிலான ரசிகர்கள் கேட்டதன் படி பிரியங்கா மற்றும் அபிஷேக் செய்த விஷயங்கள் பற்றி நேரடியாக கேட்டு, அவர்களை பதில் சொல்ல முடியாமல் திணற வைத்தார். தாங்கள் நினைத்ததை கமல் அப்படியே கேட்கிறாரே என இதை வரவேற்றனர்.

பிரியங்காவுக்கு செம டோஸ்

பிரியங்காவுக்கு செம டோஸ்

பஞ்சதந்திர டாஸ்க்கின் போது சின்ன பொண்ணை பிரியங்கா சோதனையிட்டது. பகல் நேரங்களில் தூங்கியது. அக்ஷரா பேப்பரில் எழுதியதை விதிமீறல் என விமர்சித்த பிரியங்கா, நிரூப் கையில் தான் எழுதி காட்டியது என்பது உள்ளிட்ட பல தவறுகளை நேரடியாக கேட்டார். பிரியங்காவும் முடிந்த அளவு சமாளித்து பார்த்தார். கடைசியில் எதுவும் முடியாததால், எனது தவறை ஒப்புக் கொள்கிறேன். இனி இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்றார்.

அபிஷேக்கை விளாசிய கமல்

அபிஷேக்கை விளாசிய கமல்

பிறகு அபிஷேக், நெட்டிசன்களின் விருப்பப்படி கண்டபடி கேள்விகள் கேட்டு வறுத்தெடுத்தார். கமல் கேட்ட பல கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லி நல்ல பெயர் எடுத்து தப்பித்துக் கொள்ளலாம் என முயற்சி அப்பாவி போலவும், அசடு வழிந்தும் சமாளித்தார் அபிஷேக். இந்த வாரம் அபிஷேக் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என கூறப்படும் நிலையில், அவரை கமல் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியது பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.

 அக்ஷரா – பாவனி விவகாரம்

அக்ஷரா – பாவனி விவகாரம்

இசைவாணி, தாமரை ஆகியோரை முதலில் சேவ் செய்த கமல், நீண்ட நாட்களாக போய் கொண்டிருக்கும் அக்ஷரா, பாவனி விவகாரம் பற்றி விசாரித்தார். இருவரும் பல விதமாக தங்கள் தரப்பு விளக்கங்களை கொடுத்தனர். அக்ஷரா, தன்னை நாமினேட் செய்யும் படி அபினய் இடம் எழுதி காட்டியதாக பாவனி குற்றம்சாட்டினார். ஆனால் அதை மறுத்த அக்ஷரா, நான் நாமினேட் செய்வதற்காக எழுதி காட்டவில்லை. யாருடன் பிரச்சனை என கேட்டதால் பாவனி பெயரை எழுதி காட்டியதாக கூறினார்.

என்ன தாம்மா உங்க பிரச்சனை

என்ன தாம்மா உங்க பிரச்சனை

இருவரும் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொண்டதால் இந்த பிரச்சனை ஏற்பட்டதா என கமல் கேட்டதை அவர்கள் ஏற்கவில்லை. தன்னிடம் பேசாமல் பாவனி கத்துவதால் அவரிடம் இருந்து விலகி இருக்க முடிவு செய்து பேசாமல் விலகி செயல்வதாக அக்ஷரா சொல்கிறார். பிரச்சனை என்றால் என்னிடம் நேருக்கு நேர் பேசாமல், மற்றவர்களிடம் போய் பேசுவதால் அக்ஷராவுடன் பேச விரும்பவில்லை என பாவனி சொன்னார்.

குழம்பிப் போன கமல்

குழம்பிப் போன கமல்

இவர்களின் பிரச்சனையை தீர்த்து, சமரசம் செய்து வைக்கலாம் என கேட்ட கமல், பிரச்சனை என்னவென்று புரியாமல் வாக்குவாதம் போய் கொண்டே இருந்ததால், நீங்கள் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என தெரியவில்லை. ஆனால் மக்கள் உங்களை வேறு விதமாக புரிந்து கொண்டுள்ளனர். உங்களின் சண்டை வேறு விதமாக மக்களிடம் பிரதிபலிப்பாகும். மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என தெரியவில்லை. இருந்தாலும் உங்கள் இருவரையும் சேவ் செய்துள்ளனர் என்றார்.

இன்னும் பிரச்சனை முடியலியா

இன்னும் பிரச்சனை முடியலியா

கமல் சென்ற பிறகும் அக்ஷரா - பாவனி பிரச்சனை தீராமல், பாவனி அழுகிறார். அவரை அனைவரும் சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதற்குள் நிரூப், பாவனியை தனியாக அழைத்து செல்கிறார். அவரிடமும் சொல்லி அழுகிறார் பாவனி. அதே சமயம் அக்ஷரா சரியாக பேசியதாக அவரை ஐக்கி, அபினய் ஆகியோர் கட்டிப்பிடித்து பாராட்டுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X