»   »  கமல் ரசிகரை அடிக்கவில்லை : பரவும் இன்னொரு ஆங்கிள் வீடியோ!

கமல் ரசிகரை அடிக்கவில்லை : பரவும் இன்னொரு ஆங்கிள் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமல் ரசிகரை அடிக்கவில்லை : பரவும் இன்னொரு ஆங்கிள் வீடியோ!

சென்னை : கமல்ஹாசன் தொடர்பான பரபரப்பான வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ வைரலாகப் பரவியது.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்த கமலை, இயக்குனரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் அழைத்து வருகிறார். கமல்ஹாசன் ரசிகர்கள் கூடி நின்று கோஷம் எழுப்புகிறார்கள்.

அங்கிருக்கும் படிக்கட்டில் கமல் இறங்கும்போது ஒரு ரசிகர் முண்டியடித்துக் கொண்டு சென்ற கமலின் காலில் விழ முயற்சிக்கிறார். அவரை கமல் அடிப்பது போல அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

ரசிகரை அடித்த கமல்

படிக்கட்டில் கமல் இறங்கும்போது ஒரு ரசிகர் முண்டியடித்துக் கொண்டு சென்ற கமலின் காலில் விழ முயற்சிக்கிறார். கோபமுற்ற கமல் அந்த ரசிகரின் கன்னத்தில் அடித்தது போலவும் கோபமாகத் தள்ளிவிட்டது போலவும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

பெங்களூர் நிகழ்ச்சி

பெங்களூர் நிகழ்ச்சி

இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன்பு பெங்களூர் நிகழ்ச்சி ஒன்றின் போது செல்போனில் எடுக்கப்பட்டது எனத் தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில் கமலுக்குப் பின்னே நடிகை கௌதமியும் வருகிறார். இந்த வீடியோவை இப்போது ஏன் வெளியிட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 கமலுக்கு எதிராக

கமலுக்கு எதிராக

கமலுக்கு எதிரானவர்கள் கமல் அடித்ததாகக் கூறப்படும் வீடியோவை அதிகமாகப் பகிர்ந்து வருகிறார்கள். நாட்டு நன்மைக்காகப் பேசும் கமல் ரசிகரை இப்படி அடிப்பதுதான் அறமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கமல் தரப்பு விளக்கம்

கமல் தரப்பு விளக்கம்

இதுகுறித்து கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "காலில் விழும் கலாச்சாரத்தை அடியோடு வெறுப்பவர் கமல். அதனால் காலில் விழுந்த ரசிகரை அவர் தடுத்தார். போலீஸார் தள்ளிவிட்டிருக்கலாம். கமல் அடித்திருக்க வாய்ப்பில்லை" எனத் தெரிவித்துள்ளார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள்.

இன்னொரு ஆங்கிள் வீடியோ

கமல் அடித்ததாகக் கூறப்படும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அந்தச் சம்பவத்தின் இன்னொரு ஆங்கிள் வீடியோ தற்போது பரவி வருகிறது. இந்த வீடியோவில் ரசிகரை கமல் அடிக்கவில்லை. காலில் விழப்போகும் ரசிகரை போலீஸார் அப்புறப்படுத்துவதாக இருக்கிறது.

English summary
A video became viral, Kamalhaasan slaps his fan in public. Now, an another video is released on social media that was in another angle. This new video shows kamal didn't slap his fan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil