பாவனி, நிரூப், வருண் சஞ்சீவிடம் புட்டு புட்டு வைத்த கமல்...கன்ஃபஷன் ரூம் கன்ஃப்யூஷன் ரூம் ஆகிடுச்சே

சென்னை : பிக்பாசில் நேற்று போட்டியாளர்களை தனித்தனியாக கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்து அவர்களின் நிறை, குறைகளை புட்டு புட்டு வைத்தார் கமல். இதில் சிலருக்கு கமல் சொன்ன அட்வைஸ் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதை போல் முகத்தை வைத்திருந்தனர்.

Recommended Video

2021-ல் அதிகம் பேசப்பட்ட Suriya, Vijay, Ajith | Jaibhim, Thala Ajith, Rolls Royce

போட்டியின் 83 வது நாளான நேற்று, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், அமீரின் குடும்பத்தினர் வருகை, குடும்பத்தினருடனான நெகிழ்ச்சி தருணங்கள் பற்றி கமல் பேசியது என கலகலப்பாக சென்று கொண்டிருந்தது. திடீரென பிரியங்கா - நிரூப் சண்டை பற்றியும், நிரூப் மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதையும் பற்றி பேசி சீரியசாக்கினார் கமல்.

அலார்ட் செய்த கமல்

அலார்ட் செய்த கமல்

பிறகு போட்டியாளர்கள் ஒவ்வொருவரையாக கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்து, அவர்களின் நிறை மற்றும் குறைகளை சுருக்கமாக சொல்லி அலார்ட் படுத்தினார் கமல். இதில் பிரியங்கா, பாவனி போன்றனர்கள் என்ன சொல்கிறார் என்றே புரியாததை போல் முகத்தை வைத்துக் கொண்டனர்.

இங்கொரு முகம் அங்கொரு முகம்

இங்கொரு முகம் அங்கொரு முகம்

இதில் பாவனியிடம் கூறும் போது, ஆரம்பித்தில் இருந்தே தனியாக விளையாடி வருகிறீர்கள். நீங்கள் சொல்ல நினைப்பது தவறாக வெளியே காட்டுகிறீர்கள். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை சமாளித்து நிற்கிறீர்களே அதை தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கும். இங்கொரு முகம் அங்கொரு முகம் காட்டாதீர்கள் என்றார் கமல்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

சஞ்சீவிடம் பேசுகையில், போட்டியாளர்கள் பற்றிய கணிப்பு, சமநிலை உங்களிடம் உள்ளது. அது போட்டியில் இல்லையோ என தோன்றுகிறது. வாதிட வேண்டிய இடத்தில் வாதிட வேண்டும். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது உங்களுக்கு பொருந்தும். அதனால் எதிர்பாருங்கள் அனைத்தையும். சட்டை சுருங்காமல் பஸ்சில் ஆபிஸ் போக முடியாது. அப்படி நினைத்தால் மதியம் ஆகி விடும் என்றார்.

அசட்டையாக இருக்காதீர்கள்

அசட்டையாக இருக்காதீர்கள்

ராஜுவிடம் கூறுகையில், சில விஷயங்களில் பங்கெடுத்து கொள்ளவில்லை என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன். இனி பாய்ந்து விளையாடுங்கள். இதுவரை வந்து விட்டோமோ என அசட்டையாக இருக்காதீர்கள். ரசிகர்களின் கண் முதல் மூன்று இடத்தில் வருபவர்கள் மீது தான் இருக்கும். சில நேரங்களில் வந்து விட்டோம் என நினைத்து, பின்னால் வருபவர்களை பார்த்துக் கொண்டிருந்தால், அவர்கள் தட்டி சென்று விடுவார்கள் என்றார் கமல்.

ஒருவர் மட்டும் போட்டியல்ல

ஒருவர் மட்டும் போட்டியல்ல

நிரூப்பிடம் கூறுகையில், பாசிடிகவ் பக்கம் என்றால் நல்ல ஸ்டாடர்ஜியுடன் விளையாடுகிரீர்கள். ஆனால் போட்டி போக போக, ஒருவர் மீது தான் போட்டி என்பது போல் விளையாடுகிறீர்கள். அப்படி இல்லாமல், மற்றவர்கள் மீதும் கவனம் செலுத்தி விளையாடுங்கள் என்றார்.

சிடுமூஞ்சியா இருக்காதீங்க

சிடுமூஞ்சியா இருக்காதீங்க

சிபியிடம் பேசுகையில், உங்களை பிடித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் உங்களின் கோபமான முகம் தான் தெரிகிறது. நகைச்சுவை உணர்வு தெரியவில்லை. சிடுமூஞ்சி என்ற எண்ணமும் உள்ளது. இருக்கமான ஆளாக இருப்பாரோ என நினைக்க வைக்கிறது. இன்னும் குறுகிய காலமே உள்ளது. அதனால் அதை மாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யதாலே போதும் என அட்வைஸ் வழங்கினார் கமல்.

மேஜிக் எங்கே போச்சு

மேஜிக் எங்கே போச்சு

வருணிடம் கூறுகையில், டைம் நெருங்கிட்டு வருகிறது. உங்களை பற்றி வெளியே தெரியவே ரொம்ப நாள் ஆகிடுச்சு. வரும் போது மேஜிக் காட்டி வந்தீர்கள். அதை தொடர்ந்து வெளிகாட்டுங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கும் வெற்றிக்குமான தூரம் அதிகரித்து விடும் என கமல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X