பிக்பாஸ் அல்டிமேட் எதற்காக...அதிலும் நான் ஏன்....கமல் சொன்ன அசத்தல் விளக்கம்
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் எதற்காக, அதையம் தான் தொகுத்து வழங்க வந்தது எதற்காக என நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே சூப்பரான விளக்கம் கொடுத்து அசத்தி உள்ளார் நடிகர் கமல். இந்த பதில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இன்று துவங்கப்பட்டது. இதன் துவக்க விழா ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஃபீனிக்ஸ் பறவையில் சிறகுகள் விரித்த மேடையின் மத்தியில் இருந்து கமல் வருவதாக மிக பிரம்மாண்டமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

பிக்பாஸ் அல்டிமேட் ஏன்
நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே கமல் வந்ததும் எதற்காக பிக்பாஸ் அல்டிமேட் உடனடியாக துவங்கப்பட்டது என சிம்பிளாக சூப்பர் விளக்கம் கொடுத்தார். அப்போது அவர், இதற்கான பதில் உங்களிடம் இருந்து தான் வந்தது. எவ்வளவோ நடக்குது. ஆனால் கொஞ்சம் தான் காட்டுகிறீர்கள் என பலர் வருத்தப்பட்டீர்கள். அந்த குறையை போக்க தான் இந்த பிக்பாஸ் அல்டிமேட்.

தினமும் வர போகுது
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் பிக்பாஸ் ஒளிபரப்பாக உள்ளது. ஒரு மணி நேர நிகழ்ச்சியாக டிவி.,யிலும் தினமும் இரவு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதை பிறகு பார்க்கலாம். தற்போது நிகழ்ச்சிக்குள் போவோம்.

கமல் வந்தது இதுக்கு தான்
இதிலும் நீங்க எதற்காக என கேட்டால், பெரிய திரையில் இருந்து சின்னத்திரையில் வரும் போதும் வந்தேன். சின்னத்திரையில் இருந்து மொபைல் போனுக்கு வரும் போதும் வந்தேன். வாட்ச்சிற்கு போனாலும் வருவேன். நான் நானாக இருக்கும் பிக்பாசில் எப்படி நான் வராமல் போவேன் என்றார் கமல். தொடர்ந்து ட்ரோன் மூலம் பிக்பாஸ் வீட்டை பார்வையாளர்களுக்கு சுற்றி காண்பித்தார் கமல்.

செம இன்ட்ரோ
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஹாட்ஸ்டார் கொடுத்த இன்ட்ரோவும் அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தது. கமல் சொல்வதற்கு முன்பே பிக்பாஸ் அல்டிமேட் எதற்காக என்ற விளக்கத்தை, மக்களின் ரியாக்ஷனோடு ஹாட்ஸ்டார் கொடுத்து விட்டது இன்னும் ரசிக்கும் படியாக இருந்தது.


Click it and Unblock the Notifications











