விக்ரம் படத்திற்காக 60 டிக்கெட்களை வாங்கிய கமல் ரசிகர்...என்ன செய்திருக்கார் பாருங்க
சென்னை : கமல் ரசிகர்கள் ஒருவர் விக்ரம் படம் பார்ப்பதற்காக 60 டிக்கெட்களை வாங்கி உள்ளார். இதுக்கே ஷாக் ஆகி விடாதீர்கள். அந்த டிக்கெட்களை வைத்து அவர் செய்துள்ள காரியத்தை கேட்டால் நிச்சயம் டென்சன் ஆகாமல் இருக்க முடியாது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படக்குழுவினரின் ப்ரொமோஷன் வேலைகள் தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி வருகிறது.

டிக்கெட் வாங்க ரசிகர்கள் தீவிரம்
விக்ரம் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பெருபாலான தியேட்டர்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு, விக்ரம் படம் பார்ப்பதற்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டன. பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டன. கமல் ரசிகர்கள் பலர் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவிற்கான டிக்கெட்டை பெற தீவிரமாக போராடி வருகின்றனர். பலர் எப்படியாவது டிக்கெட் வாங்கி விட வேண்டும் என என்னென்னவோ செய்து வருகின்றனர்.

60 டிக்கெட் வாங்கிய ரசிகர்
இந்த சமயத்தில் கமலின் தீவிர ரசிகர்கள் ஒருவர் சோஷியல் மீடியாவில் போட்டுள்ள பதிவு அனைவரையும் டென்ஷன் ஆக்கி உள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த கமலின் தீவிர ரசிகர்கள் ஒருவர், விக்ரம் படத்தின் 60 டிக்கெட்களை வாங்கி உள்ளார். அந்த டிக்கெட்களை ஹார்ட் வடிவில் அடுக்கி வைத்து, அதற்கு நடுவில் படுத்தபடி போட்டோ எடுத்து, அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

இது ஒன்றும் புதிதல்ல
ஆனால் பெரிய நடிகர்களின் தீவிர ரசிகர்கள் இது போல் செய்வது ஒன்றும் புதிதில்லை என்றாலும், டிக்கெட் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் மற்ற ரசிகர்களை இது கடுப்பாக்கி உள்ளது. சமீபத்தில் ஆந்திராவை சேர்ந்த ஜுனியர் என்டிஆரின் ரசிகர் ஒருவர் ஆர்ஆர்ஆர் படத்திற்கு 30 க்கும் அதிகமான டிக்கெட் வாங்கிய தகவல் வெளியானது.
Recommended Video

இவருக்கு மட்டும் எப்படி கிடைத்தது
இத்தனை டிக்கெட்களை வாங்கி இவர்கள் என்ன செய்வார்கள். குடும்பத்தினர், நண்பர்களை அழைத்துச் செல்வதாக வைத்தாலும் 60 என்பது கொஞ்சம் அதிகம் தான். ஒருவேளை பிளாக்கில் விற்று விடுவாரா அல்லது வெறும் விளம்பரத்திற்காக இப்படி வாங்கி வைத்துள்ளாரா. நாங்க ஒரு டிக்கெட்டே கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறோம். இவர் மட்டும் எப்படி 60 டிக்கெட்களை வாங்கினார் என பெரும்பாலான நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications