»   »  கமலுக்கு குரல் கொடுக்காத நடிகர் சங்கம்... கடுப்பில் கமல் ரசிகர்கள்!

கமலுக்கு குரல் கொடுக்காத நடிகர் சங்கம்... கடுப்பில் கமல் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமலுக்கு ஏற்கனவே அரசியல்வாதிகளால் ஏற்பட்ட ஆறாக்காயங்கள் ஏராளம். ஆனாலும் கூட ஜெயலலிதா மறைவுக்கு பின், முக்கியமாக சசிகலா முதல்வராக துடித்த பின்னர் வெகுண்டெழுந்தார். தொடர்ந்து ஜனநாயக படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்தவரை, இப்போது அதிமுக அரசு நெருக்க தொடங்கியுள்ளது.

கமல் நற்பணி இயக்க நிர்வாகியை கைது செய்தனர். அதிமுகவின் கட்சி நாளேட்டில் மிக மிகக் கேவலமாக கமல்ஹாசனைத் திட்டியிருந்தார்கள். இந்த விஷயங்களில் எல்லாம் கமலுக்கு ஆதரவாக திரையுலகில் யாருமே வாய் திறக்கவில்லை.

Kamal fans disappoint with Nadigar Sangam

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர் கமல் தான். நடிகர் சங்கத்துக்காக ஆலோசனை மட்டுமல்லாது உதவிகளும் செய்துவருகிறார். ஆனால் பாவனா விஷயத்துக்கு கூட குரல் கொடுத்த நடிகர் சங்கம், கமலுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக்கூடாதுதான். அதுக்காக இப்படியா? என்று ஆதங்கப்படுகிறார்கள் கமல் விசுவாசிகள்.

English summary
Kamal fans have disappointed with Nadigar Sangam for not opened mouth in support of Kamal Hassan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil