Don't Miss!
- News
பிரபல டிவி செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் தலைமறைவு.. மீண்டும் ஏமாற்றம்.. போலீஸ் அறிவிப்பு
- Finance
இப்படி கூட மோசடி நடக்கலாம்.. வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐசிஐசிஐ
- Technology
தரமான சிப்செட்: நீங்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் Vivo Y77 5G அறிமுகம்: என்ன விலை?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Automobiles
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அடுத்த படங்களில் பிஸியாகும் கமல்...கைவிடப்படுகிறதா இந்தியன் 2 ?
சென்னை : விக்ரம் படத்திற்கு பிறகு கமல் அடுத்தடுத்து நடிக்க போகும் படங்களில் நடிக்க போவதாகவும், அடுத்து கமலை யாரெல்லாம் இயக்க போகிறார்கள் என்ற லீஸ்டும் வெளியாகி வருகிறது. இதனால் இந்தியன் 2 படத்தின் நிலை என்ன, படம் கைவிடப்படுகிறதா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.
விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். 2020 ம் ஆண்டின் துவக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் கிரைன் விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் காரணமாக ஷுட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு கொரோனா, லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது.
லாக்டவுன் முடிந்த பிறகு தேர்தல் வேலைகளில் கமல் பிஸியானார். இதனால் அந்நியன் இந்தி ரீமேக், ராம் சரணுடன் தெலுங்கு படம் ஆகியவற்றின் அறிவிப்பை வெளியிட்டார் ஷங்கர். ஆனால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது என தடை கேட்டு கோர்ட் வரை சென்றது லைகா ப்ரொடக்ஷன்ஸ். இதில் ஷங்கர் மற்ற படங்களை இயக்க தடை விதிக்க கோர்ட் மறுத்து விட்டது.
MBA
படிக்க
தான்
சென்னைக்கு
வந்தேன்...
இயக்குனர்
லோகேஷ்
கனகராஜ்
பகிர்ந்த
முக்கிய
தகவல்!

கமல், ஷங்கர் இருவரும் பிஸி
இதற்குள் லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் ஷங்கர் சமாதானம் ஆனதால் இந்தியன் 2 படம் சில மாதங்களில் மீண்டும் துவங்கப்படும் என்றார்கள். ஆனால் அதற்குள் ராம் சரண் படத்தை இயக்க போய் விட்டார் ஷங்கர். கமலும் தேர்தல் வேலை முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடிக்க போய் விட்டார். தற்போது கமல் நடித்த விக்ரம் படம் முடிந்து, ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஜுன் 3 ம் தேதி படம் ரிலீசாக உள்ளது.

இத்தனை படங்களில் நடிக்கிறாரா
விக்ரம் முடிந்த பிறகு கமல், இந்தியன் 2 ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்பட்டது. ஆனால் விக்ரம் படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் படம், லோகேஷ் கனகராஜுடன் மற்றொரு படம், மகேஷ் நாராயணன் இயக்கும் படம், ரத்ன குமார் படம் என வரிசையாக கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ராஜமெளலி, மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் புதிய படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமலிடம் ராஜமெளலி பேசி வருவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அவ்வளவு நாள் ஆகுமா
மற்றொரு புறம் ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி 15 படம் இன்னும் முடியவில்லையாம். இந்த படத்தை 2023 பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டிற்கு தான் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால், படத்தில் இன்னும் நிறைய வேலைகள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு முழுவதும் ஷங்கர் பிஸி என்பது மட்டும் உறுதியாகிறது.

விவேக்குக்கு பதில் யார்
இதற்கிடையில் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்த விவேக், படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார். ஹீரோயின் ரோலில் நடித்த காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. அவர் மீண்டும் எப்போது நடிக்க வருவார் என தெரியவில்லை. விவேக் நடிக்க காட்சிகளை வேறு ஒருவரை வைத்து மீண்டும் எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது.

இப்போதைக்கு வாய்ப்பில்லையா
படங்களுடன் விரைவில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். ஷங்கர், கமல் இருவருமே பிஸியாக இருப்பதால் இந்தியன் 2 இப்போதைக்கு துவங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. வழக்கு போட்டு, கோர்ட் வரை சென்ற லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இந்தியன் 2 பற்றி பேசுவதை விட்டு விட்டதால் இந்தியன் 2 படம் மொத்தமாக கைவிடப்படுகிறதா என ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட்டில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.