திடீரென்று பின்னால் வந்து நின்ற கமல்..அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
சென்னை : விக்ரம் படத்திற்காக கமல் செய்து வரும் ப்ரோமோஷன் வேலைகள் வேற லெவலில் உள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் கமல் செய்து வரும் ப்ரொமோஷன் அனைவரையும் அசர வைத்துள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படம் பற்றி வெளியாகும் தகவல்கள் ஒவ்வொன்றும் அனைவருக்கும் படம் பற்றிய ஆர்வத்தை தூண்டி வருகிறது.

விக்ரமிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்
விக்ரம் படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ள நிலையில், படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 53 நிமிடங்கள் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் சிங்கிளான பத்தல பத்தல பாடல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று செகண்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது.

வேற லெவல் ப்ரொமோஷன்
ஏற்கனவே படத்தின் ப்ரொமோஷனுக்காக ரயில்களில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரையப்பட்டது. இதைத் தொடர்ந்து யூட்யூப் சேனல் ஒன்று அளித்த விருந்தில் கமல் கலந்து கொண்டுள்ளார். இவை போதாது என்று படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். விக்ரம் பார்ட் 3 வர போகிறது என்பது போன்ற தகவல்கள் படத்திற்கு வேற லெவலில் ப்ரொமோஷனாக அமைந்துள்ளது.

சர்ப்ரைஸ் கொடுத்த கமல்
இந்நிலையில் லேட்டஸ்டாக, ஆங்கில டிவி சேனல்கள் பாணியில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி உள்ளார் கமல். விக்ரம் படத்தின் ப்ரொமோஷனுக்காக, ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கமல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ரசிகர்களிடம் கேட்கப்பட்டது. கமல் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களின் பின்னால் வந்து நின்று கமல் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

செம டிரெண்டாகும் வீடியோ
ஒருவருக்கு மட்டுமல்ல. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அத்தனை ரசிகரின் பின்னாலும் போய் நின்று சர்ப்ரைஸ் கொடுத்து, ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளார் கமல். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி செம டிரெண்டாகி வருகிறது. ஆனால் இது போல் ரசிகர்கள் பங்கேற்று பேசிக் கொண்டிருக்கையில், அவரின் பின்னால் நின்று பெரிய ஸ்டார்கள் சர்ப்ரைஸ் கொடுப்பது இது முதல் முறையல்ல.

தமிழில் இதுவே முதல் முறை
இதற்கு முன் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இது போன்று பலமுறை, பல நிகழ்ச்சிகளில் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மலையாளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகர் மோகன்லாலும் இது போல் செய்துள்ளார். ஆனால் தமிழில் முதல் முறையாக, விக்ரம் படத்தின் ப்ரொமோஷனுக்காக கமல் இதை செய்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்ல, கமல் ரசிகர்களையும் வேற லெவலில் உற்சாகப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











