கமல் – மகேஷ்பாபு இணையும் பிரம்மாண்ட படம்...இயக்கப் போவது இவர் தானாம்

சென்னை : கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய படங்களுக்கு உலக அளவில் மவுசு அதிகரித்துள்ளது. பலரின் கவனத்தையும் ஈர்த்த, ஃபேவரெட் படங்களாக இவை மாறி உள்ளன. பாடல், படம் என அனைத்திலும் பல சாதனைகளை இந்த படங்கள் படைத்து வருகின்றன.

குறிப்பாக பாகுபலி, கேஜிஎஃப், 2.ஓ, மாஸ்டர் போன்ற படங்கள் பல மடங்கு அதிக வசூலை பெற்றுள்ளன. இதனால் பான் இந்தியன் படங்களுக்கு ரசிகர்கள் இடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால் தென்னிந்திய மெகா ஸ்டார்களை ஒன்றாக இணைத்தும் எடுக்கப்படும் படங்களும் அதிகரித்து வருகின்றன.

கமல் - மகேஷ்பாபு இணையும் படம்

கமல் - மகேஷ்பாபு இணையும் படம்

தற்போது லேட்டஸ்ட் தகவலாக கமல் ஹாசன், மகேஷ் பாபு இணையும் பிரம்மாண்ட படம் பான் இந்தியன் படமாக தயாராக உள்ளது தான். இந்த புதிய படத்தை இயக்க போவது வேறு யாரும் இல்லை, கமர்ஷியல் படங்களை எடுப்பதில் கைதேர்ந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான்.

இன்னும் சில காலம் ஆகும்

இன்னும் சில காலம் ஆகும்

இந்த படம் பற்றி அவரிடம் கேட்ட போது, இந்த படத்தின் வேலைகள் மிக ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இது முழு வடிவம் பெற இன்னும் சிறிது காலம் ஆகும். தற்போதுள்ள பெருந்தொற்ற சூழல், இரு நடிகர்களின் நெருக்கடியாக பட வேலைகள் ஆகியவை காரணமாக இந்த படம் தாமதமாகும் நிலை உள்ளது என்றார்.

Recommended Video

Top 5 Beats: பிக் பாஸ் 5ல் கமலுக்கு சம்பளம் இவ்வளவா? கொடி கட்டிப் பறக்கும் நயன்தாராவின் மார்க்கெட்!
ரெண்டு பேருமே பிஸி

ரெண்டு பேருமே பிஸி

மகேஷ்பாபு தற்போது பரசுராம் இயக்கும் சர்காவு வாரி பாட என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். மற்றொரு புறம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம் சிக்கலில் உள்ளது.

ரசிகர்களுக்கு விருந்தாகும் படம்

ரசிகர்களுக்கு விருந்தாகும் படம்

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம், பாபநாசம் 2 போன்ற படங்களிலும் கமல் நடிக்க உள்ளார். ஒருவேளை கமல், மகேஷ்பாபு இணையும் படம் உறுதியாகும் பட்சத்தில் இருவரின் ரசிகர்களுக்கும் அது பெரும் விருந்தாக அமையும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X