இது பிக் பாஸ் புரமோ இல்லை.. விக்ரம் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா? கமல் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
சென்னை: டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கமல்ஹாசன் கோட் சூட் உடன் தோன்றிய உடனே பிக் பாஸ் சீசன் 6ன் புரமோவா என ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம், இது பிக் பாஸ் புரமோ இல்லை.. அதுக்கும் மேல!
Recommended Video
ஆம், தமிழ் சினிமாவுக்கு எதுவும் செய்யாமல் சில மேடைகளில் சில பிரபலங்கள் ஏளனமாக பேசி வந்த நிலையில், நான் இருக்கேன் பார்த்துக்கலாம் என படத்தை இறக்கி வசூல் வேட்டையை நடத்திய கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு தான் இது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடித்துள்ள விக்ரம் இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

400 கோடி கிளப்
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படமே 500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது எனக் கூறுகின்றனர். ஆனால், அதன் பட்ஜெட் மிகவும் அதிகம் என்றும் கூறுகின்றனர். ஆனால், 110 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 400 கோடி கிளப்பில் அதுவும் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறிய விக்ரம் கோலிவுட்டுக்கே கிடைத்த வெற்றியாக இந்த ஆண்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

25 நாட்களை கடந்து
ஜூன் 3ம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், காயத்ரி, ஷிவானி நாராயணன் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 25 நாட்களை கடந்து பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில், அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வந்த நிலையில், திடீரென கமல் கோட் சூட் அணிந்து வந்ததும் பிக் பாஸ் சீசன் 6க்கான புரமோவா என பிக் பாஸ் ரசிகர்கள் ஒரு நொடி நினைத்து விட்டனர். ஆனால், கையில் துப்பாக்கி உடன் ஒரு டோரை சுட்டு வீழ்த்த அதற்கு பின்னால் இருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தான் விரைவில் விக்ரம் ஸ்ட்ரீமிங் ஆக போகிறது என்கிற அறிவிப்பை கமல் அட்டகாசமாக புது புரமோவை வெளியிட்டே அறிவித்துள்ளார்.

ஓடிடியில் எப்போ
வரும் ஜூலை ம் தேதி ஓடிடியில் விக்ரம் வெளியாகும் என ஏற்கனவே எதிர்பார்த்ததை போலவே தற்போது ஜூலை 8ம் தேதி தான் விக்ரம் ஓடிடியில் வெளியாகிறது என்கிற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக கமல்ஹாசனே கூறியுள்ளது ஓடிடி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. அதற்கு முன்னதாக ஹெச்.டி. பிரின்ட் ஏதும் லீக்காகமல் இருக்கவும் விக்ரம் படக் குழு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











