தோட்டத்து பாடகர் உன்னியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்: வைரல் வீடியோ
Recommended Video

சென்னை: தோட்டத்தில் அமர்ந்து விஸ்வரூபம் பட பாடலை பாடி பிரபலமானவர் உன்னி. அவர் கமல் ஹாஸன் முன்பு அந்த பாடலை பாடி பாராட்டு பெற்றுள்ளார்.
கேரளாவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் ராகேஷ் உன்னி கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்தில் வந்த உன்னை காணாது பாடலை பாட அவரின் நண்பர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
வீடியோவை பார்த்த விஸ்வரூபம் படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான சங்கர் மகாதேவன் அந்த பாடகர் யார், அவருடன் வேலை செய்ய விரும்புகிறேன் என்று ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

உன்னி
சங்கர் மகாதேவன் கேட்ட உடனேயே ஆளாளுக்கு அந்த பாடகர் யார் என்று தேடி அது உன்னி என்பதை கண்டுபிடித்தனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் உன்னியின் செல்போன் எண்ணை ட்விட்டரில் வெளியிட்டார்.
கமல்
உன்னியை வரவழைத்து கமல் ஹாஸன் முன்பே அந்த பாடலை பாட வைத்துள்ளனர். அந்த வீடியோவை விஸ்வரூபம் 2 இசையமைப்பாளர் ஜிப்ரான்
ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

வாய்ப்பு
ராகேஷ் உன்னிக்கு வாய்ப்பு கொடுப்பதாக ஜிப்ரான் தெரிவித்துள்ளார். கடின உழைப்பு மற்றும் திறமை ஒருபோதும் கண்டுகொள்ளப்படாமல் போகாது என்கிறார் ஜிப்ரான்.
சாம்
ராகேஷ் உன்னிக்கு வாய்ப்பு அளிப்பதாக சங்கர் மகாதேவனும் தெரிவித்துள்ளார். மேலும் தனது புதிய ஆல்பத்தில் உன்னியை பாட வைப்பதாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.ஸும் வாக்குறுதி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











