twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீடியா கான்’19 சமூக வலைதளத்தை பயன்படுத்துவது எப்படி… கமல் சொல்லும் அட்வைஸ்

    |

    சென்னை: மாற்றம் காணும் ஊடகத்துறை என்னும் கருத்தரங்கு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறவுள்ளது. அதில் டிஜிட்டல் யுகம் குறித்தும் சமூக வலைதளத்தை இளைஞர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது தொடர்பாகவும் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசவுள்ளார்.

    நம்ம சென்னை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் Changing screens & Emerging Media Paradigms என்ற தலைப்பில் மாறி வரும் ஊடகத் துறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

    Kamal Haasan attend Changing screens & Emerging Media Paradigms

    MEDIA CON'19 என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. பல விதமான கேள்விகளும் பதில்களும் இங்கு கிடைக்கும்.

    ஊடகத்துறையில் உச்சம் தொட்ட பலரும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைப் பகிர உள்ளனர். இதில் மீடியா ஆசிரியர்கள், மீடியா மாணவர்கள் கலந்துகொள்ளலாம். தமிழகம் முழுக்க உள்ள பல மீடியா மாணவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினால் அவர்களுடைய முன்னேற்றத்துக்கு மிகவும் எளிதாக இருக்கும்.

    வரும் செப்டம்பர் 30ஆம் தேதி காலை நிகழ்வில், 21ஆம் நூற்றாண்டில் திரைப்பட தயாரிப்பு மற்றும் விளம்பரத்தில் எதிர் கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் கலைப்புலி தாணு தனது கருத்துகளை பகிர்கிறார். சினிமா விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் செய்வதில் இவர் ஒரு ஜாம்பவான் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை தான்.

    புகைப்படத் துறையில் இருக்கும் புதிய டிஜிட்டல் ட்ரெண்ட் தொடர்பாக பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட் ராம் தனது கருத்துகளை பகிர்கிறார். (இவர் எடுத்த பல போட்டோக்கள் இன்று வரை ட்ரெண்ட் செட்டிங்காக இருக்கிறது). இவர் என்னை கிளிக் செய்ய மாட்டாரா என்று பல முன்னணி நடிகைகள் காத்திருக்கின்றனர்.

    அதேபோல் ஒளிப்பதிவு தொடர்பாக, ஒளிப்பதிவாளர் ரவி.கே..சந்திரன் தனது அனுபவங்களைப் பகிர உள்ளார். ரவி.கே.சந்திரனைப் பற்றி சொல்ல ஒரு படம் போதாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், அவருடைய பிளாக் திரைப்படம் உள்ளது. கேமரா கண்களால் சும்மா மிரட்டி இருப்பார்.

    சினிமா துறை சந்திக்கும் சவால்கள் தொடர்பாக இயக்குநர் பால்கி தன்னுடைய கருத்துகளை முன் வைக்கிறார். பால்கியின் வரவு பல மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கப்போகிறது என்பது உறுதி.

    மேலும் தொலைக்காட்சி ஊடகத்தில் ஏற்படும் மாற்றங்கள், டிஜிட்டல் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளது.

    இரண்டாம் நாள், அதாவது அக்டோபர் 1ஆம் தேதி டிஜிட்டல் யுகம் குறித்தும் சமூக வலைதளத்தை இளைஞர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது தொடர்பாகவும் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசவுள்ளார். கமல்ஹாசன் இதற்கு முன்பு, ஐ.ஐ.டி மாணவர்களுக்கு மிக பெரிய சினிமா பொக்கிஷங்களை பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கண்டிப்பாக கூடுதலாக நிறைய தகவல்கள் தருவார் என்று நம்புவோம்.

    இதைத் தொடர்ந்து ஃபேக் நியூஸ், சினிமா தயாரிப்பில் இருக்கும் சவால்கள் மற்றும் சிக்கல்கள், புதிய ரசிகர்களுக்கான திரைக்கதை, யூடியூப் பிசினஸ் மாடல் போன்ற தலைப்புகளில் அனுபவம் வாய்ந்த பலர் கலந்துகொண்டு பேசவுள்ளனர். இதில் திரைத்துறை மற்றும் ஊடகத் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்கள் தங்களின் கருத்துகளை பகிர உள்ளனர். இவை அனைத்தும் மீடியா சார்ந்த ஊடக நண்பர்கள் அனைவருக்கும் பயனுள்ள ஒரு அரங்கமாக அமையும் என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    இரண்டு நாட்கள் காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் கீழே இருக்கும் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் அடையலாம். டேனியல் சர்மா : 9600365152

    சினிமா மீதும் ஊடகத்துறையின் மீதும் அதீத காதல் கொண்டு வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு இந்த இரண்டு நாள் கருத்தரங்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்பது நிச்சயம்.

    English summary
    A seminar on Changing screens & Emerging Media Paradigms will be held at Loyola College, Chennai. Actor Kamal Haasan will speak about the digital age and the creative use of social networking by young people.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X