»   »  மேலும் மேலும் விருதுகள்.. துவளாமல் தொடரும் புதுமைபித்தனின் திரைப்பயணம்

மேலும் மேலும் விருதுகள்.. துவளாமல் தொடரும் புதுமைபித்தனின் திரைப்பயணம்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் புதுப் புது முயற்சி.. அவற்றில் சில படங்கள் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாவிட்டாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த பயணத்திற்கு தயாராகிவிடுவார். அவர்தான் கமலஹாசன்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடத்தை வகித்து வரும் கமலின் முயற்சிகள் அசாத்தியமானது. அந்த வகையில் பல படங்களைப் பற்றி பேசலாம். அதில் முக்கியமான மூன்றுப் படங்களை எடுத்துக் கொள்ளலாம்.

Kamal Haasan to be conferred France’s Chevalier honour

தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கிய ராஜபார்வையில் பார்வையிழந்த கதாநாயகனாக நடித்து அசத்தி இருப்பார் கமலஹாசன். எல்லோராலும் பரபரப்பாக பேசப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாக அதன் இலக்கை அடைய முடியாமல் போய்விட்டது. இது ஒரு பெரிய இழப்பு என்றாலும் கவலை இல்லை கமலுக்கு... ஸ்டார்ட் கேமரா என்று அடுத்தப்படத்திற்கு போய்விடுவார் கமல்.

அதேப் போன்றுதான் குணா திரைப்படமும். இதுவும் பெரிய அளவில் மக்களால் பேசப்படவில்லை என்றாலும் நடிப்பில் பல புதிய முயற்சிகளை கமலஹாசன் இந்த திரைப்படத்தில் செய்திருப்பார். தன்னை கறுப்பாக்கிக் கொண்டு மனநல பாதிக்கப்பட்டவர் போன்ற வேடத்தில் நடிப்பில் பல புதிய திறவுகோலை மக்கள் முன் வைத்திருப்பார். டெக்ஸ் என்று அடுத்தப்படத்திற்கு தயாரானார் கமல்

ஹேராம் திரைப்படம் இதில் மிக மிக முக்கியமானது. காந்தி சுதந்திரப் போராட்டம் என்று கதைப் போக்கில் சொல்லிச் சென்றாலும், இந்திய வரலாற்று பின்னணியை மிகத் துல்லியாக இந்தப் படத்தில் கமலஹாசன் சொல்லியிருப்பார். கதை சொல்லும் விதமும், நடிப்பும் பின்னிப் பிணைந்த அற்புதமான ஒரு கலைப்படைப்பு அது. ஆனால் இந்தப் படமும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. திரைப்படத் துறையில் இனி சேர வருவோருக்கும், ஏற்கனவே இருப்பவர்களுக்கும், திரைப்படத் துறை மாணவர்களுக்கும் பாடமாகவே அமைந்துள்ளது. ஒரு படத்தை எப்படி படத்தை எடுப்பது என்று இயக்கத்தை கற்றும் கொள்ளும் பாடமாகவே ஹேராம் திரைப்படம் இன்றும் உள்ளது. இந்தப் படத்திற்கு வரவேற்பில்லை என்றாலும் அதைப் பற்றி கவலையில்லாமல் அடுத்த பல முயற்சிகள்.. பல பிரச்சனைகள்.. எல்லாவற்றையும் கடந்து நிற்கிறார் கமலஹாசன்.

அவரின் இதுபோன்ற புது புது முயற்சிகளும் தோல்வி கண்டு அஞ்சாமல் பயணத்தைத் தொடர்வதும்தான் நடிப்பின் உச்சத்தை தொட்டுள்ள கமலுக்கு இன்று செவாலியே விருது என்ற உயரிய விருது கலைவுலகின் சிறந்த சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள் கமல்....

English summary
Actor Kamal Haasan will be awarded the Chevalier de L'Ordre Arts et Lettres (The Knight of the Order of Arts and Letters) by the French government. The Order is part of France’s premier award, the Legion of Honor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil