பிக் பாஸ் வீட்டில் குழந்தையாக மாறிய கமல்… இதெல்லாம் எதுக்குன்னு தெரியுமா?

சென்னை: தமிழ்த் திரையுலகின் பன்முக கலைஞரான கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் கமல்ஹாசன் குழந்தையாக மாறிய அந்த தருணத்தின் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கமலின் பிக் பாஸ்

கமலின் பிக் பாஸ்

சினிமாவின் சகலகலா வல்லவனாகிய நடிகர் கமல்ஹாசன், தற்போது சின்ன திரையிலும் கலக்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார். 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில், தற்போது 6வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனிலும் வழக்கம்போல பல அதிரடியான திருப்பங்களுடன் பிக் பாஸ் போட்டி களைகட்டியுள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் கமல் குழந்தையாக மாறிய போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

68வது பிறந்தநாள் கொண்டாட்டம்

68வது பிறந்தநாள் கொண்டாட்டம்

கமல்ஹாசன் நாளை (7ம் தேதி) தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலும் கமலின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்களுடன் கமல் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக பிக் பாஸ் வீட்டில் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில், கமல்ஹாசன் பலூன்களுடன் விளையாடுகிறார். இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் கமல் பலூன் வைத்து விளையாடும் போட்டோக்களும் வெளியாகியுள்ளன.

விஜய் டிவி ரசிகர்களுக்கு

விஜய் டிவி ரசிகர்களுக்கு

பிக் பாஸ் வீட்டில் கமல் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறும் வேளையில், இன்னொரு பக்கம் தனியாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி சூப்பராக செலிப்ரேட் செய்துள்ளது விஜய் டிவி. உலகநாயகன் பிறந்தநாள் கொண்டாட்டமான இது, இன்று (நவ 6) மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கேஎஸ் ரவிக்குமார், குஷ்பூ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். கமல் பிறந்தநாள் கொண்டாட்டம், விஜய் டிவி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ப்ரைஸ் இருக்குமா?

சர்ப்ரைஸ் இருக்குமா?

கமலின் 68வது பிறந்தநாளை விஜய் டிவி வெரைட்டியாக கொண்டாடி வரும் நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சப்ரைஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது இந்த வாரம் யாரும் எவிக்‌ஷன் செய்யப்படமாட்டார்கள் என சொல்லப்பட்டது. ஆனால், கமல் பிறந்தநாளுக்கு ட்ரீட் மட்டுமே கிடைக்கும், மற்றபடி எவிக்‌ஷன் கண்டிப்பாக உண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் ஷெரினா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X