பாத்ரூமில் கதறி கதறி அழுத தனா.. ஊழல்வாதின்னு வெளுத்து விட்ட கமல்.. இந்தியன் தாத்தாவாவே மாறிட்டாரு!
சென்னை: தனலட்சுமி கல்லா பெட்டியில் இருந்த காசை பதுக்கியதை வைத்து பத்தாயிரம் கோடி பணத்துடன் நாட்டை விட்டே ஓடியவர்களை வெளுத்து வாங்கி இருந்தார் கமல்ஹாசன்.
பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் எல்லாமே சமுதாய பிரச்சனைகளுடன் கனெக்ட் செய்யும் விதமாகவும் அரசியல் கருத்தை எடுத்து சொல்லும் விதமாகவும் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் ஊழலுக்கு எதிராக இந்தியன் தாத்தாவாகவே மாறி பேசிய நிலையில், தனலட்சுமி ஓடிப் போய் பாத்ரூமில் கதறி கதறி அழுத காட்சிகள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன.

திருட்டுப்பழி
கல்லா பெட்டியில் இருந்த காசை கல்லா பெட்டியில் வைக்காமல் தனியாக எடுத்து வைத்து விட்டு கடைசியாக தனலட்சுமி அதிக பணம் வைத்திருப்பதாக சொல்லி வெற்றிப் பெற்ற நிலையில், இது ஏமாற்றி பெற்ற வெற்றி என கமல்ஹாசன் சன்டே எபிசோடில் வெளுத்து வாங்கி விட்டார்.

இந்தியன் தாத்தாவாகவே
வீட்டில் எப்படி ஊழல் இருக்கோ அதே போலத்தான் நாட்டிலும் ஊழல் நிறைந்து கிடக்குது. எங்க இண்டஸ்ட்ரியிலேயே கறுப்பு பணம் அதிகமாக புழங்கும் போது அதையெல்லாம் வேண்டாம் என்று எப்பவோ நான் முடிவு எடுத்து விட்டேன். தனலட்சுமி செய்தது மன்னிக்க முடியாத தப்பு அவருக்கு உடந்தையாக இருந்த குயின்ஸி, அமுதவாணன், ரச்சிதா அனைவரும் தப்பு செய்தவர்கள் தான் என கமல் பேச பேச, எங்கே பெல்ட்டில் இருந்து கத்தி எடுத்துட்டு போய் குத்திடுவாரோன்னு கூட ரசிகர்கள் பயந்து விட்டனர்.

பவரை பிடுங்கிட்டாரு
ஏமாற்றி பெற்ற வெற்றி நிலைக்காது என்பது போல விக்ரமனை ஏமாற்றி தனலட்சுமி பெற்ற வெற்றி காரணமாக அவருக்கு அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கமல் தனலட்சுமியை வெளுத்து எடுத்த நிலையில், அடுத்த வாரம் விக்ரமன் நாமினேஷன் ஃப்ரீ பவரை பெற்றுக் கொண்டார்.

அரசியல் பாடம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனலட்சுமி செய்த விஷயத்தை வைத்து அப்படியே நாட்டு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாடம் புகட்டும் விதமாக வெறித்தனமாக கமல் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தியன் 2 பட டைலாக்கை இங்கே வந்து பேசுகிறாரா என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பாத்ரூமில் கதறி அழுது
கமல் திட்டித் தீர்த்து விட்டு தனலட்சுமி தான் பதுக்கள் பேரரசி என அனைவர் முன்னிலையிலும் அம்பலப்படுத்தும் போது ஜாலியாக விழுந்து விழுந்து சிரித்த தனா, பின்னர் கமல் வெளுத்து வாங்கியதும் பாத்ரூமுக்கு ஓடிப்போய் கதறி கதறி அழுத காட்சிகள் பார்வையாளர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

அடுத்த பலியாடு
ஷெரினா விளையாட்டில் பொய் சொன்னார் என கமல் பொளந்து கட்டிய நிலையில், கடந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், தனலட்சுமி பண்ண தப்பை குறூம்படம் போட்டு அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அடுத்த வாரம் நாமினேஷனில் இடம்பெற உள்ள தனலட்சுமியை மக்கள் ஓட்டே போடமல் வெளியேற்றுவார்களா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











