Don't Miss!
- News
உச்சநீதிமன்றத்துக்கு புதிய 5 நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. . யாரெல்லாம் தெரியுமா? முழுவிபரம்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வீடு ரெடி.. வீரர்களும் ரெடி.. வேட்டைக்கு நீங்க ரெடியா..? பிக் பாஸ் 6 வீட்டை சுற்றி காட்டிய கமல்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 துவங்குவதை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டை கமல் சுற்றிப் பார்த்த டூர் புரமோவை தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் புரமோக்கள் இன்று முதல் மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த தொடங்கும், முற்றிலும் பழக்கப்படாத புது முகங்கள் அதிகம் பேர் இந்த சீசனில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், நிச்சயம் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வீடு ரெடி.. வீரர்களும் ரெடி.. வேட்டைக்கு நீங்க ரெடியா என கமல் கேட்டுள்ள புதிய புரமோ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிக் பாஸ் 6 வீட்டுக்குள் முதல் ஆளாக உள்ளே நுழைந்தவர் இவர் தானா? வேற யாரெல்லாம் இதுவரை போயிருக்காங்க!

இந்தியன் 2 கெட்டப்
விக்ரம் படத்தைத் தொடர்ந்து இந்த கெட்டப்பில் தான் இந்தியன் 2 படத்தில் கமல் நடித்து வருகிறார் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் வந்திருப்பதை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடிகிறது. வார வாரம் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டு ரசிக்கவே பெருங்கூட்டம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீடு
மீடியாவுக்கு பிக் பாஸ் வீட்டை பார்க்க அனுமதி கொடுத்த நிலையிலேயே பிக் பாஸ் வீட்டில் நீச்சல் குளம், ஜெயில் எல்லாம் இந்த சீசனில் எப்படி இருக்கப் போகுதுன்னு தெரிய வந்திருந்தது. இந்நிலையில், கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டை சுற்றிக் காட்டும் அதிகாரப்பூர்வ புரமோவிலும் அவை அப்படியே இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

நீச்சல் குளத்தில் மேட்ரஸ்
பிக் பாஸ் சீசன் 2வுக்கு பிறகு நீச்சல் குளத்தை பயன்படுத்த முடியாமல், அந்த கிணத்தை இழுத்துப் பூட்டுங்கடா என படையப்பா படத்தில் ஆர்டர் போடுவது போல போட்ட நிலையில், லாஸ்லியா, ரம்யா பாண்டியன், ஷிவானி, பாவனியின், கவர்ச்சி குளியலை எல்லாம் ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்தனர். ஆனால், இந்த முறை நீச்சல் குளத்துடன் அதில் மேட்ரஸும் போடப்பட்டுள்ள நிலையில், கவர்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது என நம்பலாம்.

மேஜிக் பண்ணும் கமல்
போன சீசன் போல பார்க்கும் இடங்களில் எல்லாம் 6ம் நம்பர் இல்லாமல் இருப்பதே பெரிய ஆறுதல். இந்நிலையில், கமல் ஹாசன் மேஜிக் எல்லாம் செய்து 6ம் நம்பரை காட்டுவது புரமோவில் செம ஹைலைட்டாக உள்ளது. பிக் பாஸ் பக்கத்தில் பெரிதாக 6 வரும் என பார்த்தால் டோரில் உள்ள செட் தான் அந்த 6 என்பது புரியவே ரசிகர்களுக்கு நேரம் எடுத்து விடும் போல இருக்கு.

வேட்டைக்கு ரெடியா
வீடு ரெடி.. வீரர்களும் ரெடி.. வேட்டைக்கு நீங்க ரெடியா என கமல் கேட்டதுமே, ஷோவை மட்டும் ஸ்டார்ட் பண்ணுங்க எப்படி ட்ரோல் பண்ணி, பட்டப் பெயர் வைத்து ஒவ்வொரு போட்டியாளர்களின் இமேஜையும் டேமேஜ் பண்ணி வேட்டையாடுறோம் பாருங்க என புரமோவுக்கு கீழ் பிக் பாஸ் ஆர்மியினர் புறப்பட்டு விட்டனர்.