அமெரிக்கா பறக்கும் கமல்...எதுக்குன்னு தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க?

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு கமல் செம பிஸியாகி விட்டார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி, அவர் நடிக்க உள்ள படங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல், விக்ரம் படத்தை தொடர்ந்து தான் அடுத்ததாக டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிக்கும் உள்ள படமும் மல்டி ஸ்டார் படம், இது தேவர்மகன் 2 ஆக இருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த படம் பற்றி எந்த தகவலும் இதுவைர வெளியாகவில்லை.

உதயநிதியை தயாரிக்கும் கமல்

உதயநிதியை தயாரிக்கும் கமல்

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் துவங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுவதற்காக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில கலந்து கொண்ட கமல், உதயவிநிதியின் அடுத்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தான் தயாரிக்க போவதாக தெரிவித்தார்.

அமெரிக்கா பறக்கும் கமல்

அமெரிக்கா பறக்கும் கமல்

ஆனால் கமல் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக கமல், விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வேறு எதற்காகவும் இல்லை. நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் இந்தியன் 2 படத்திற்கு தயாராவதற்கு தான் என சொல்லப்படுகிறது.

இதுக்கு தான் அமெரிக்கா பயணமா

இதுக்கு தான் அமெரிக்கா பயணமா

டைரக்டர் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்திற்காக டாப் மேக்அப் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தான் கமல் அமெரிக்கா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2 ல் வயதான கெட்அப் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக தான் கமல் ஹாலிவுட்டின் டாப் மேக்அப் கலைஞர்களை சந்திக்க போவதாக சொல்லப்படுகிறது.

கமலின் அடுத்த படம் இதுதான்

கமலின் அடுத்த படம் இதுதான்

ஏற்கனவே கமலின் மேக்அப் சரியாக அமையவில்லை என்று தான் இந்தியன் 2 படம் தாமதமானது. அதற்கு பிறகு விபத்து, கொரோனா, லாக்டவுன், வழக்கு என அடுத்தடுத்த காரணங்களால் இந்தியன் 2 படம் தொடர்ந்து தாமதமானது.இந்த முறையும் அது போல் தவறு நடக்காமல் இருக்கத்தான் கமல் இப்போதே இந்தியன் 2 படத்திற்காக தயாராக சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

எப்போ ஷுட்டிங் ஆரம்பம்

எப்போ ஷுட்டிங் ஆரம்பம்

அமெரிக்காவில் கமல் 3 வாரங்கள் தங்க போவதாகவும், அதற்கு பிறகு இந்தியா திரும்பும் கமல் செப்டம்பர் மாதத்தில் செப்டம்பர் மாதத்தில் இந்தியன் 2 ஷுட்டிங்கை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு தான் கமல், மகேஷ் நாராயணன் படத்திற்கு தயாராவார் என சொல்லப்படுகிறது.

இவங்களுக்கு பதில் யாரு

இவங்களுக்கு பதில் யாரு

இந்தியன் 2 படத்தில் துவங்கப்பட்ட போது இதில் காஜல் அகர்வால், விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் கமிட்டாகி இருந்தனர். ஆனால் தற்போது குழந்தை பிறந்துள்ளதால் காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்திலிருந்து விலகி உள்ளார். இதே போல் விவேக், நெடுமுடி வேணு இருவரும் உயிரிழந்து விட்டனர். இதனால் அவர்களள் நடித்த கேரக்டர்களில் யார் நடிக்க போகிறார்கள் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையைமக்கும் இந்தியன் 2 படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X