அதிர்ச்சி.. ரோபோ சங்கர் திடீர் மரணம்.. கமல்ஹாசன் ரொம்ப உடைஞ்சு போயிட்டாரே

சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டதாக வெளியான அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர் மறைவு செய்தியை அறிந்த கமல்ஹாசன் மீண்டும் அவர் எழுந்து வந்துவிட மாட்டாரோ என எழுதிய பதிவு ரசிகர்களை உலுக்கியுள்ளது.

தனது மகள் இந்திரஜாவின் திருமணத்தை ஊர் உலகமே பார்த்து வியக்கும் அளவுக்கு நடத்திய ரோபோ சங்கர் ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக மோசமான நிலைக்கு சென்றதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

Kamal Haasan heartfelt note on Robo Shankar sudden demise

சமீபத்தில், கிங்காங் உடன் நீச்சல் குளத்தில் ரோபோ சங்கர் விளையாடிய வீடியோக்கள் வைரலான நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போதே பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவர் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

கமல்ஹாசன் உருக்கமான பதிவு:

"ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே." என ரோபோ சங்கர் குறித்து கமல்ஹாசன் உருக்கமான பதிவை தற்போது வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருந்தவர் ரோபோ சங்கர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

விஜய் டிவி பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரோபோ சங்கர் மறைவால் கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X