»   »  சனி, ஞாயிறில் உங்கள் வீட்டுக்கே வந்து அரசியல் பேசுவார் கமல்

சனி, ஞாயிறில் உங்கள் வீட்டுக்கே வந்து அரசியல் பேசுவார் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் 2 கூடிய விரைவில்...வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியில் ஹிட்டடித்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு தமிழில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. உலக நாயகன் கமல் ஹாஸன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Kamal Haasan to host Bigg Boss 2

நிகழ்ச்சி மூலம் தனது அரசியல் கருத்துகளை மக்களிடம் எளிதில் கொண்டு சென்றார். கமல் தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை துவங்கி பிசியாக உள்ளார்.

இந்த காரணத்தால் அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்கப் போகிறாராம்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமாம். பிக் பாஸ் மூலம் கமல் என்னென்ன அரசியல் கருத்து கூறப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்கு வர வேண்டும் என்பதால் கமல் சமாளித்துக் கொள்வார்.

English summary
According to reports, Kamal Haasan is going to host the second season of Bigg Boss tamil TV reality show that is set to start in the month of june.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X