»   »  அரசியலுக்கு வந்துவிட்டார் 'ஆண்டவர்': அட, அவர் தாம்பா சொன்னாரு!

அரசியலுக்கு வந்துவிட்டார் 'ஆண்டவர்': அட, அவர் தாம்பா சொன்னாரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி தான் அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய முடியாது என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

ஆண்டவரே எப்பொழுது அரசியலுக்கு வருகிறீர்கள் என்று கமல் ஹாஸனிடம் அவரது ரசிகர்கள் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அந்த கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் தனக்கே உரிய பாணியில் பதில் அளித்துள்ளார்.

சக்தி

சக்தி

பிக் பாஸ் வீட்டில் தற்போது சுயநலம் அதிகமாக உள்ளது. நான்காவது வாரமோ, ஐந்தாவது வாரமோ நான் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று கமல் சார் என்னிடம் சொன்னார். அதை கேட்டு ஹர்ட் ஆகிடுச்சு என்று சக்தி பிக் பாஸ் மேடையில் தெரிவித்தார்.

அரசியல்

அரசியல்

சார் என் மீது ஏதோ கோபத்தில் இருக்கிறார் போல என்று நினைத்து சினேகனிடம் போய் கேட்டேன். அதற்கு அவரோ என்னிடம் நல்லவிதமாக பேசினார். நான் வெளியே வந்த பிறகு என்னை கிண்டல் செய்து பேசியுள்ளார் என்றார் சக்தி.

கிண்டல்

கிண்டல்

அரசியல்வாதிகள் இப்ப இருக்கிற அரசியல்வாதிகள் நக்கல் பண்ற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க அதனால் தான் அந்த மூடுல சொன்னேன் என்று கமல் சக்தியிடம் கூறினார்.

முகமூடி

முகமூடி

கவலைப்படாதீங்க ஏன் என்றால் அந்த கேலியை இனிமேல் நான் பண்ண முடியாது. நான் இனிமேல் முகமூடி போட்டுக் கொண்டு இருப்பதாக இல்லை. யார் எப்படி இருந்தாலும் சரி என்று கமல் தெரிவித்தார்.

English summary
Kamal Haasan has told that he can't troll politicians anymore. He hinted in his own way that he is already a politician.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X