»   »  குண்டர் சட்டத்தில் உள்ள போக வேண்டியவங்க நம்ம மேல அதை பாய்ச்சுகிறார்கள்: கமல் ஆவேசம்

குண்டர் சட்டத்தில் உள்ள போக வேண்டியவங்க நம்ம மேல அதை பாய்ச்சுகிறார்கள்: கமல் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குண்டர் சட்டத்தில் உள்ள போக வேண்டியவங்க எல்லாம் வெளிய நம்ம மேல அதை பாச்சிக்கிட்டு இருக்காங்களே என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொந்தளித்தார் கமல்.

கமல் ஹாஸன் ட்விட்டர் மூலம் மட்டுமே அரசியல் பேசுகிறார் என்று ஆளாளுக்கு கிண்டல் செய்கிறார்கள். இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசியுள்ளார்.

ஜூலி தனது அனுபவங்களை கமலிடம் கூற அங்கு ஆரம்பமானது அரசியல் பேச்சு.

ஜூலி

ஜூலி

எங்க வீட்டு பெண்ணாக நினைத்து அனுப்பினால் இப்படி பொய் சொல்லிட்டியேம்மா என்று அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள் என்று ஜூலி கமலிடம் தெரிவித்தார்.

குணாதிசயங்கள்

குணாதிசயங்கள்

உங்களின் குணாதிசயங்கள் எல்லாம் பார்வையாளர்களுக்குள்ளும் உள்ளது. அதை குத்திக்காட்டியது மாதிரி கூட கோபம் வரலாம். அதையும் புரிந்து கொள்ளுங்கள் என்று ஜூலியிடம் கூறினார் கமல்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

ஜூலி மீது இவ்வளவு கோபப்பட வேண்டிய அவசியமே இல்லை. இதே ஜல்லிக்கட்டில் பார்த்த ஜூலி உங்களுடைய கதாநாயகி ஆக முடியும். ஒரு சின்ன பொய்க்காக கோபம் என்றால் அரசியல்வாதிகளை எல்லாம் ஏன் விட்டு வச்சீங்க என்று கமல் ஆக்ரோஷமாக கேட்டார்.

கோபம்

கோபம்

இவ்வளவு கோபம். ஒரு சின்ன பொண்ணு மேல காட்டுறீங்களே. குண்டர் சட்டத்தில் உள்ள போக வேண்டியவங்க எல்லாம் வெளிய நம்ம மேல அதை பாச்சிக்கிட்டு இருக்காங்களே என்று கொந்தளித்தார் கமல்.

பாதுகாத்து வையுங்கள்

பாதுகாத்து வையுங்கள்

இந்த கோபத்தை பாதுகாத்து வையுங்கள். இது பாதுகாக்கப்பட வேண்டிய கோபம். அதை வெளிப்படுத்த வேண்டிய காலம் விரைவில் வரும். நான் இவங்களுக்கு பரிந்து பேசவில்லை. எதிர்த்து பேசுகிறேன். நீங்களும் நியாயமான நேரத்தில் எதிர்த்து பேச வேண்டும் என்றார் கமல்.

வீணாக்க வேண்டாம்

வீணாக்க வேண்டாம்

கோபத்தை பாதுகாத்து வையுங்கள். ஜூலி, காயத்ரி மீது காண்பித்து வீணடிக்க வேண்டாம். சரியான நேரத்தில் கோபத்தை காண்பியுங்கள். பல ஓட்டை போட்ட ஷவர் பாத் மாதிரி இருக்கக் கூடாது. அடிச்சா தீயணைக்கும் ஜெட்டாக மாற வேண்டும் என கமல் தெரிவித்தார்.

தைரியம்

தைரியம்

இது மேடை கிடைத்ததால் சொல்லும் அறிவுரை இல்லை. அறிவரை தான். எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் அறிவுரை. எனக்கு நான் சொல்லிக் கொள்ளும் தைரியம். எனக்கு அது நிறைய தேவைப்படுகிறது. அதற்கு உங்களின் கோபம் தான் ஃபியூயல் ஆகும் என்று கமல் கூறினார்.

English summary
Kamal Haasan said that those who should get arested under goondas act are ordering police to use the same against others.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil