»   »  'விஷால் ஒரு செயல்வீரர்'... நடிகர் கமல்ஹாசன் புகழாரம்

'விஷால் ஒரு செயல்வீரர்'... நடிகர் கமல்ஹாசன் புகழாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால் என நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷாலை, கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார்.

உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் சிறப்பு மே தினவிழா கொண்டாடப்பட்டது.

Kamal Haasan Lauds Vishal

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்தாத்ரேயா மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த்திரையுலகிலிருந்து நடிகர் கமல்ஹாசன், விஷால், விஜயகுமார்,பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது ''இது வாழ்த்து மேடை இல்லை என்றாலும் இதைச் சொல்ல வேண்டும்.

நாங்கள் நாற்பது ஆண்டுகளாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் செய்யத் தவறியதை விஷால் குழுவினர் செய்து காட்டினார்கள்.

நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் என்கிற பட்டத்தை விஷாலுக்குக் கொடுத்தால் தவறில்லை. நாங்கள் செய்யவில்லை. நீங்கள் செய்தீர்கள்.

எங்களுக்கு சட்டை அழுக்காகி விடுமோ என்கிற பயம் இருந்தது, ஆனால் சட்டையே இல்லாமல் போய்விடுமோ என விஷால் குழுவினர் இறங்கினார்கள். செய்து காட்டினார்கள்'' என்று விஷாலைப் பாராட்டியிருக்கிறார்.

English summary
Kamal Haasan Praises Vishal in Fefsi (Film Employees Federation of South India) Meeting.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil