Don't Miss!
- News
மக்களே உஷார்! தமிழகத்தில் திக் திக் கிளப்பும் கொரோனா.. பாதிப்பு 2,500 ஐ தாண்டிருச்சாம்
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Sports
கொரோனாவிலிருந்து மீண்ட ரோகித் சர்மா.. நடப்பு போட்டியிலேயே விளையாடுகிறார்.. பிசிசிஐ பலே திட்டம்
- Finance
நீங்களும் வேண்டாம்.. உங்க பிஸ்னஸ்-ம் வேண்டாம்.. தெறித்து ஓடிய சீன நிறுவனம்..!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விஜய்க்கு போன் போட்டு வாழ்த்திய கமல்.. தளபதி 67லும் விக்ரம் கனெக்ஷன் இருக்கும் போல தெரியுதே!
சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 67 படத்தின் அப்டேட் வருமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, முதலில் தளபதி 66 கொண்டாட்டம் தான் என நடிகர் விஜய் ஒன்றுக்கு மூன்று போஸ்டர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
காலையில் இருந்தே ஏகப்பட்ட பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் விஜய்க்கு வாழ்த்து சொல்லி வரும் நிலையில், நடிகர் கமல் நேரடியாக போன் போட்டே வாழ்த்து சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்
இரண்டு
ரஜினி...இது
மட்டும்
கேஜிஎஃப்
2
ஸ்டைலில்
இருக்கே...வாரிசை
இப்படியா
கலாய்ப்பது

பிரபலங்களின் அணிவகுப்பு
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் தொடங்கி கோலிவுட்டின் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் வரை ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். நடிகர்களுக்கு போட்டியாக ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டே என நடிகைகளும் அணிவகுத்து வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

3 போஸ்டர்கள்
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கோட்சூட்டில் விஜய், காய்கறி வண்டியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு குழந்தைகளுடன் விஜய் மற்றும் பீஸ்ட் படத்தில் ஓட்டி வரும் பைக்கை நிறுத்தி விட்டு போஸ் கொடுப்பது போல மூன்று போஸ்டர்களை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.

போனில் வாழ்த்திய கமல்
சோஷியல் மீடியாவில் பலரும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக் கூறிய நிலையில், கமல்ஹாசன் போன் போட்டே விஜய்க்கு வாழ்த்து சொல்லி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் விக்ரம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும் போது 'தளபதி அய்யா' என கமல் பேசியிருந்தது விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருந்தது. அது பற்றி கமலிடம் கேட்கும் போது, சிவாஜி என்ன அய்யான்னு சொன்னார், நான் தம்பி விஜய்யை அய்யான்னு சொன்னேன் என ஸ்கோர் செய்திருந்தார்.

தளபதி 67ல் விக்ரம் கனெக்ஷன்
தளபதி 67 அப்டேட் எதுவுமே அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகாத நிலையிலும், விக்ரம் படத்தில் நடித்த சில முக்கிய நடிகர்கள் தளபதி 67 படத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், இது LCU இல்லை என இதுவரை லோகேஷ் கனகராஜ் மறுக்கவில்லை. அதே சமயம் உறுதிப்படுத்தவும் இல்லை என்றாலும், விக்ரம் கனெக்ஷன் பலமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே கமல் போன் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.