»   »  'தூங்காவனம்' ராஜேஷின் குழந்தைக்கு பெயர் சூட்டிய கமல்!

'தூங்காவனம்' ராஜேஷின் குழந்தைக்கு பெயர் சூட்டிய கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் ராஜேஷின் பெண் குழந்தைக்கு நடிகர் கமல்ஹாசன் 'ஹோசிகா மிருணாளினி' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனிடம் 8 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ராஜேஷ் எம்.செல்வா. விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களில் கமலுடன் இணைந்து ராஜேஷ் பணியாற்றியிருக்கிறார்.

கடந்த வருடம் வெளியான தூங்காவனம் படத்தின் மூலம் ராஜேஷை இயக்குநராக கமல் அறிமுகப்படுத்தினார்.கடந்த சில தினங்களுக்கு முன் ராஜேஷுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்நிலையில் ராஜேஷின் வீட்டிற்கு சென்ற கமல்ஹாசன், அக்குழந்தைக்கு 'ஹோசிகா மிருணாளினி' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பகிர்ந்த ராஜேஷ் "உலகநாயகன் எங்களது மகளை ஆசிர்வதித்து 'ஹோசிகா மிருணாளினி' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.

இந்த சந்தோஷமான தருணம் எதிர்காலத்தில் அவளுடைய மிகச்சிறந்த பொக்கிஷங்களில் ஒன்றாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

ஸ்ருதிஹாசன், அக்ஷரா என கமலும் 2 பெண் குழந்தைகளுக்கு தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Rajesh M Selva Tweeted "Ulaganayagan blessed us & named our daughter..."Hoshika Mrinalini"...! Happy moment for her to treasure in future".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil