»   »  கமல்-ஸ்ருதி படப்பிடிப்பு ஏப்ரல் 29ல் தொடங்குகிறது

கமல்-ஸ்ருதி படப்பிடிப்பு ஏப்ரல் 29ல் தொடங்குகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மகள் ஸ்ருதியுடன் தான் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 29 ம் தேதி துவங்குகிறது என, கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஸ்ருதிஹாசன் தொடர்ந்து பாடகி, நடிகை என இந்தியத் திரையுலகைக் கலக்கி வருகிறார்.

Kamal Haasan Next Movie Starts April 29

முன்னணி நடிகையாக வலம்வந்த போதிலும் இதுவரை தந்தை கமலுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்ததில்லை. தற்போது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.

கமல்- ஸ்ருதிஹாசன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 29 ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதனை கமல்ஹாசன், மாதவனுடனான உரையாடலின் போது பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து சீரியஸ் படங்களாக நடித்து வருவதால் இப்படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கமல் திட்டமிட்டிருக்கிறாராம்.

English summary
Confirmed: Kamal Haasan next Movie Starts on April 29th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil