For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சரியான குறும்படம்.. ஆஸ்கர் நாயகி ஷெரினாவை அழ விட்ட கமல்.. டிராமா குயின் முகத்திரை கிழிந்தது!

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஆயிஷாவிடம் மலையாளத்தில் பேசி வரும் பிரச்சனையை நாளைக்கு கேட்கிறேன் என்று கடைசியாக சொன்ன கமல் சனிக்கிழமை எபிசோடு முழுவதும் ஷெரினாவை சும்மா வறுத்தெடுத்து விட்டார்.

  குறும்படம் போடுகிறேன் என்றதும் தனலட்சுமிக்கு இருந்த தைரியம் ஷெரினாவுக்கு கொஞ்சம் கூட இல்லை.

  போடட்டும் தப்பா இருந்தா மன்னிப்பு கேட்டுட்டு போறேன்னு சர்வ சாதாரணமாக ஷெரினா பேசியதற்கு எல்லாம் சேர்த்து வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டார்.

  மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது.. சிறப்பு விருந்தினராக ரஜினி பங்கேற்பு! மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது.. சிறப்பு விருந்தினராக ரஜினி பங்கேற்பு!

  ஷெரினாவுக்கு குறும்படம்

  ஷெரினாவுக்கு குறும்படம்

  குறும்படம் போட்டு உங்க மேல தப்பு இருந்தால் வீட்டை விட்டு போக ரெடியா? என கமல் கேட்ட நிலையிலும், எந்தவொரு தயக்கமும் இன்றி ஓகே சொன்ன தனலட்சுமி எங்கே? ஓஹோன்னு வாயை மூடிக்கிட்டு மனசுக்குள்ளே அழுது புலம்பிய ஷெரினா எங்கே என பிக் பாஸ் ரசிகர்கள் சூர்யவம்சம் ராதிகா மீம்ஸை போட்டு ட்ரோல் செய்யும் அளவுக்கு ஷெரினாவுக்கு சூப்பரான குறும்படத்தை போட்டுக் காட்டினார் கமல்.

  தனலட்சுமி ஹேப்பி

  தனலட்சுமி ஹேப்பி

  குறும்படத்திற்கு பிறகு முதல் ஆளாக தனலட்சுமி எழுந்து நின்று கை தட்டி தனது சந்தோஷத்தை கொண்டாடினார். தான் எந்தவொரு வெஞ்சன்ஸும் வைத்துக் கொண்டு ஷெரினாவை கீழே தள்ளி விட வில்லை என்கிற வாதத்தில் நிலையாக இருந்த தனலட்சுமி கடைசியில் தள்ளி விடாமல் அவரும் சேர்ந்து விழுந்த வீடியோ காட்சியை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் அப்படியே ஷாக் ஆகினர்.

  ஐ விட்னஸ்

  ஐ விட்னஸ்

  நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன் என தொடர்ந்து தனலட்சுமியிடமும் அவருக்கு சப்போர்ட்டாக வந்து பேசிய விக்ரமன் உள்ளிட்டோர் உடன் அசீம் அசிங்கமாக சண்டை பிடித்து வந்த நிலையில், இன்றைக்கு ஐ விட்னஸ் நீங்க தான் என கமல் சொல்லி விட்டு குறும்படம் போட்டுக் காட்டி அசீமின் முகத்தில் கரியை பூசிவிட்டார்.

  ஆஸ்கர் நாயகியை அழ விட்ட கமல்

  ஆஸ்கர் நாயகியை அழ விட்ட கமல்

  ஷெரினாவுக்கு ரசிகர்கள் ஆஸ்கர் நாயகி என்றும் டிராமா குயின் என்றும் ஏகப்பட்ட பெயர்களை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசன் அதை உறுதிப்படுத்தும் வகையில் விக்ரமன் உங்க தலையிலேயே அடிபடவில்லை என்கிறார் என்றதுமே ஷெரினா முகம் மாறிவிட்டது. பின்னர், அடிபட்டு டாக்டரை போய் பார்த்த நீங்கள், உடம்பு முடியாத நீங்க, ஏன் அமுதவாணன் விளையாடும் போதும் ஏன் வந்து விளையாண்டு உடம்பு முடியாதவர் போல ஆனீர்கள் என வெளுத்து வாங்கி விட்டார்.

  அசீம் உட்காரும் போது இனிச்சிதோ

  அசீம் உட்காரும் போது இனிச்சிதோ

  கபடி விளையாட வந்துட்டா அடிபடுதேன்னு கலங்கக் கூடாது. மத்தவங்க தொட்டா மட்டும் அச்சச்சோ அடிபட்டுடுச்சேன்னு வலித்த உங்களுக்கு, உங்களுக்கு விருப்பமான அசீம் வந்து அவ்ளோ பெரிய வெயிட் உடன் உங்க மடியில உக்காரும் போது வலிக்கவில்லையா என ஒரே போடாக போட்டு ஷெரினாவின் முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டு விட்டார்.

  கடமைக்கு சாரி

  கடமைக்கு சாரி

  தனலட்சுமியை ஷெரினாவும் அசீமும் அப்படி திட்டிவிட்டு கடைசியில் அவர் மீது தப்பு இல்லை என கமல் ஒன்றுக்கு பல முறை குறும்படம் போட்டுக் காட்டிய பின்னரும் மனம் வருந்தி வருத்தம் தெரிவிக்காமல், ஷெரினா நீங்க சாரி கேட்கணும் என்று கமல் எடுத்துக் கொடுக்க கடமைக்கு சாரி தனலட்சுமி என ஷெரினா சொல்லி விட்டு திருப்பிக் கொண்டது ரசிகர்களை மேலும், கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

  English summary
  Kamal Haasan plays Kurumpadam and roasts Sherina completely. Fans trolls Sherina and commenting Oscar actress Sherina, Drama Queen Sherina in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X