பெருமையால் என் நெஞ்சு பெரிதானது; இயக்குநர் விஸ்ணுவர்தனின் ஷெர்ஷா படத்தை பாராட்டிய கமல்!

சென்னை: இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்தி படமான ஷெர்ஷா படத்தை மனதார பாராட்டி உள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.

சிறு வயது முதலே சில சினிமாக்கள் ஏன் இப்படி நம்முடைய இந்திய ராணுவத்தை கொச்சைப் படுத்தி காட்டுகின்றனர் என்கிற கோபம் எனக்கு இருந்தது.

ஆனால், ஷெர்ஷா படம் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது பெருமிதத்தை கொடுக்கிறது என புகழாரம் சூட்டி உள்ளார்.

8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதயநோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

கார்கில் கதை

கார்கில் கதை

கார்கில் போரின் போது கேப்டன் விக்ரம் பாத்ரா எப்படி நாட்டுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்தார் என்கிற வலி மிகுந்த கதையை தத்ரூபமாக காட்டி அசத்தி உள்ளனர் ஷெர்ஷா படக்குழுவினர். கேப்டன் விக்ரம் பாத்ராவாக சித்தார்த் மல்கோத்ராவும் அவரது காதலியாக கியாரா அத்வானியும் நடிப்பால் கண்ணீர் வரவழைத்துள்ளனர்.

பாலிவுட்டில் அறிமுகம்

பாலிவுட்டில் அறிமுகம்

தமிழில் பில்லா, ஆரம்பம் என தல அஜித்தை வைத்து இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கிய படங்கள் எல்லாமே வேற லெவல் வெற்றி அடைந்தன. இந்நிலையில், அடுத்ததாக பாலிவுட்டில் ஷெர்ஷா படத்தை இயக்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

கமல் பாராட்டு

கமல் பாராட்டு

கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் தயாரிப்பில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கி உள்ள இந்த படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஷெர்ஷாவை மனதார பாராட்டி போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

எரிச்சலூட்டியது

எரிச்சலூட்டியது

சிறு வயது முதலே இந்திய ராணுவம் தொடர்பாக வெளியான சில படங்கள் எனக்கு ரொம்பவே எரிச்சல் அடைய செய்தது. தவறான கோணத்திலேயே நம்முடைய இந்திய ராணுவத்தை சில இயக்குநர்கள் சித்தரித்து படமாக்கி வந்தனர். அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் இந்த ஷெர்ஷா இந்திய ராணுவத்தின் உண்மையான தியாகத்தை திரையில் செதுக்கி உள்ளது என புகழ்ந்துள்ளார்.

தியாகியின் மகன்

தியாகியின் மகன்

ஒரு சுதந்திர போராட்ட வீரரின் மகனான எனக்கு அது மிகவும் எரிச்சலை அடைய செய்தது. ஆனால், இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் அசத்தல் நடிப்பில் வெளியாகி உள்ள ஷெர்ஷா திரைப்படம் மனதுக்கு நிறைவை அளித்துள்ளதாக பாராட்டி உள்ளார்.

மார்பு விரிந்தது

மார்பு விரிந்தது

இந்திய ராணுவத்தினரின் சுயநலமற்ற தியாகத்தை இந்த படத்தின் மூலம் காட்டியிருக்கும் விதத்தை பார்த்து என் மார்பு பெருமையால் விரிவடைந்தது என உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் எந்தவொரு படத்திற்கும் சொல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை கூறியுள்ளார்.

கரண் ஜோஹர் நன்றி

கரண் ஜோஹர் நன்றி

இந்திய சினிமாவின் ஒப்பற்ற நடிகர் கமல்ஹாசனே ஷெர்ஷா படத்தை இப்படி பாராட்டியதும் அதன் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் கமல்ஹாசனின் அந்த பாராட்டு ட்வீட்டுக்கு கீழே நன்றி கூறி பதிவிட்டுள்ளார். இது எங்கள் படக்குழுவுக்கு மிகப்பெரிய பாராட்டு என்றும் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார். கமலின் பாராட்டுக்கு நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானி உள்ளிட்டோரும் நன்றி கூறியுள்ளனர்.

சார்பட்டா குழுவுடன்

சார்பட்டா குழுவுடன்

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் கோக்கன், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படமும் ஷெர்ஷாவை போலவே அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியானது. அந்த படத்தின் படக்குழுவினரையும் நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து மனதார பாராட்டி இருந்தார். அதன் புகைப்படங்களும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. சார்பட்டா பரம்பரை படத்தைத் தொடர்ந்து ஷெர்ஷா படத்துக்கு கமல் இப்படியொரு பாராட்டை தெரிவித்துள்ளார்.

வேகம் எடுக்கும் விக்ரம்

வேகம் எடுக்கும் விக்ரம்

தளபதி விஜய்யின் மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது குருநாதர் கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் படம் தான் விக்ரம். இதில், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் என மிரட்டலான நடிகர்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. விக்ரம் படத்தில் சமீபத்தில் நடிகை ஷிவானி நாராயணன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியன் 2 பற்றி

இந்தியன் 2 பற்றி

60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்தியன் 2 படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இயக்குநர் ஷங்கர் அடுத்தடுத்த படங்களில் பிசியாகி விட்டார். லைகா நிறுவனம் ஒரு பக்கம் நீதிமன்றத்தில் முட்டி மோதினாலும் ஷங்கர் அடுத்த படங்களை இயக்குவதற்கு எந்தவொரு தடையும் இல்லை என்கிற நிலை உருவாகி உள்ளதால், கமல்ஹாசனை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது லைகா நிறுவனம். விக்ரம் முடிந்த உடன் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்றும் கமல் கூறியுள்ளார்.

பிக் பாஸ் வருது

பிக் பாஸ் வருது

இது மட்டுமின்றி கமல்ஹாசன் தொகுத்து வழங்கப் போகும் பிக் பாஸ் சீசன் 5ன் டீசர் ஷூட்டிங்கும் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் விரைவில் பிக் பாஸ் சீசன் 5 அறிவிப்புடன் புத்தம் புதிய டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை ஆட்டம் பாட்டத்துடன் வந்த கமல், இம்முறை எப்படி பிக் பாஸ் டீசரில் தோன்ற உள்ளார் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X