Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அம்பேத்கர் கடிதம் என் கண்களை கலங்கடித்தது.. கண்ணீர் விட்ட கமல்.. என்ன பண்ணாரு தெரியுமா?
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் அவர்கள் சொந்தங்களுக்கு கடிதம் எழுதி படித்த நிலையில், விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த காட்சி 24 மணி நேர எபிசோடில் நீக்கப்பட்ட நிலையில், பெரிய சர்ச்சை வெடித்தது. அதன் பின்னர் அந்த காட்சி ஒரு மணி நேர எபிசோடில் ஒளிபரப்பாகி ரசிகர்களை அமைதியுற செய்தது.
பிக் பாஸ் வீட்டில் ஒலித்த ஜெய்பீம் என ரசிகர்கள் விக்ரமன் எழுதிய கடிதத்தை கொண்டாடிய நிலையில், ஞாயிறு எபிசோடில் கமல்ஹாசன் அந்த கடிதம் தன்னை கலங்க செய்தது என பேசி விக்ரமனை வெகுவாக பாராட்டினார்.
Bigg Boss Tamil 6: அடேங்கப்பா.. தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?

அம்பேத்கருக்கு கடிதம்
இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் அவர்கள் சொந்தங்களுக்கு கடிதம் எழுதி படித்த நிலையில், விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். அம்பேத்கர் லண்டனில் பட்ட கஷ்டங்களை குறிப்பிட்டு இருந்த விக்ரமன் அவரை போல தன்னால் ஆக முடியாது என்று தெரியவில்லை ஆனால், கொஞ்சமாச்சும் மாற முயற்சிப்பேன் என எழுதியது ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது.

கிளம்பிய சர்ச்சை
விக்ரமன் கடிதம் எழுதும் போது அவர் அம்பேத்கருக்கு கடிதம் எழுதுகிறார் என்பது கேமராவில் பதிவான உடன் அதன் பின்னர் அந்த கடிதம் பற்றிய காட்சிகளை 24 மணி நேர எபிசோடில் காட்டவில்லை என ரசிகர்கள் பெரிய சர்ச்சையை கிளப்பினர். அதன் பின்னர் ஒரு மணி நேர எபிசோடில் அந்த கடிதம் இடம்பெற்றிருந்தது.

கலங்கிய கமல்
ஒவ்வொரு போட்டியாளர்களாக அவர்கள் எழுதிய கடிதம் பற்றி பேசி முடித்த நிலையில், கடைசியாக விக்ரமன் தான் அம்பேத்கருக்கு எழுதிய கடிதம் பற்றி பேசினார். அதை கேட்ட கமல் அந்த கடிதத்தை நீங்க வாசிக்க கேட்டதும் நான் கலங்கிட்டேன் என்றும் பெரிய தகப்பன் அம்பேத்கர் என்றும் பேசி பிக் பாஸ் மேடையிலே கண்கள் கலங்கிய நிலையில் கமல் பேசியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

காந்திக்கு கடிதம்
அம்பேத்கர் பற்றிய பல விஷயங்களை எடுத்து சொன்ன கமல் அதன் பின்னர் நானும் ஒருத்தருக்கு இதுபோல கடிதம் எழுதினேன் என மோகன் என்பவருக்கு எழுதிய கடிதத்தை படித்துக் காட்டிய கமல் கடைசியில் அந்த மோகன் தான் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்றதும் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கைதட்டினர். இந்த கடிதத்தின் விளைவு தான் ஹேராம் படம் எடுக்கவே தன்னை உந்தியதாகவும் கமல் பேசினார்.
-
நாங்க ரூல்ஸ் பிரேக் பண்றவங்க.. வனிதா தோளில் கை போட்டு போஸ் கொடுத்த அசீம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
-
குலதெய்வத்தை வேண்டி உன் காதை அறுத்தாலும் அது நடக்காது... நெட்டிசனுக்கு சவால் விட்ட மோகன் ஜி
-
தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!