Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என் படுக்கையறையை எட்டிப்பார்க்காதீங்க.. பாவனிக்காக ராஜு மற்றும் பிரியங்காவுக்கு பொளேர் விட்ட கமல்!
சென்னை: பாவனிக்கும் அபிநய்க்கும் காதல் என்றும் பாவனிக்கும் அமீருக்கும் இடையே காதல் என்றும் பிக் பாஸ் வீட்டில் எழுந்த கிசுகிசுக்களுக்கு சரியான சாட்டையடியை கொடுத்துள்ளார் கமல்.
பாவனிக்கு இந்த விவகாரத்தில் நியாயம் கிடைத்தாக வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்தனர்.
ஆனால், வெள்ளிக்கிழமை எபிசோடில் பாவனியே ராஜுவிடம் சமாதானம் ஆன நிலையில், கமல் என்ன பஞ்சாயத்து செய்யப் போகிறார் என நினைத்த ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்டாக சனிக்கிழமை எபிசோடு இருந்தது.

பாவனியை லவ் பண்றீங்களா
ட்ரூத் ஆர் டேர் விளையாட்டில் அபிநயிடம் ராஜு நீங்க பாவனியை லவ் பண்றீங்களா? என்று கேட்டதும் அபிநய் அப்போதே யாரை பார்த்து என்ன கேள்வி கேட்குற? அறிவு இல்லையா? என பொங்கி இருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனையே வந்திருக்காது. பிக் பாஸ் ஷோவையும் இப்படியொரு கான்செப்ட்டை வைத்து நடத்தி இருக்க முடியாது.

கழுவின பாத்திரம்
வீக்கெண்டில் வந்து வெளுத்து வாங்கலாம் என கமல் நினைத்துக் கொண்டிருக்க வெள்ளிக்கிழமையே பாவனி பஞ்சாயத்து சமாதானம் ஆகி புஷ் என முடிந்த நிலையில், கழுவின பாத்திரத்தை வச்சு இருக்காங்களே என கமல் சாரே கடுப்பாகி விட்டார். ஆனாலும், தனது கடமையை செய்ய மீண்டும் அதே விஷயத்தை எடுத்து பேசி அறிவுரை வழங்கி சென்றுள்ளார்.

பெட்ரூமை எட்டிப் பார்காதீங்க
இந்த பிரச்சனை பாவனிக்கு மட்டும் நடக்கலைங்க.. நானும் பல காலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். என் வீட்டு வரவேற்பு அறை உங்களுக்கானது. ஆனால், என் வீட்டு பெட்ரூமை எட்டிப் பார்க்காதீங்க என பாவனி காதல் விவகாரம் பற்றிய பேச்சை எடுத்த அனைவருக்கும் சரியான சவுக்கடியை கொடுத்துள்ளார் கமல்.

சரண்டரான ராஜு
பாவனி விஷயத்தை தான் தான் முதலில் ஆரம்பித்து வைத்தேன் என கமல் கேட்டதும் தனக்கு தெரிந்ததை சொல்லி சரண்டர் ஆகி விட்டார் ராஜு. திருமணம் ஆன அபிநய் தன்னை ஒரு மாதிரி பார்க்கிறார் என பாவனி ஆரம்பத்தில் நினைத்து அபிஷேக், மதுமிதா உள்ளிட்ட ஹவுஸ்மேட்களிடம் பேசினார். பின்னர், அபிநய் இடமே நேரடியாக கேட்க, அப்படி எல்லாம் இல்லை என சொல்லி விட்டார் அபிநய்.

பிரியங்காவையும் விடல
ராஜு தான் இந்த விஷயத்தை முதலில் ஆரம்பித்ததாக ராஜு உள்பட பலரும் நம்பிக் கொண்டிருக்கையில் உன் கூடவே இருக்கும் பிரியங்கா தான் அபிஷேக் மற்றும் நிரூப்பிடம் இந்த கிசுகிசுவை கிளப்பி விட்டது என பக்காவாக கொளுத்திப் போட்டுள்ளார் கமல். அடுத்த வாரம் நாமினேஷனில் இது வெடிக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.