For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஃபேவரிசம் காட்டிய ரியோ.. போட்டுக் கொடுத்த பாலா.. சுட்டிக் காட்டிய ஆரி.. குறும்படம் போடுவாரா கமல்?

  |

  சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இதுவரை அராஜகம் செய்து கொண்டிருந்த அர்ச்சனாவின் அன்பு கேங்குக்கு ஆப்பு வைக்கும் வாரமாக அமைந்து விட்டது.

  சனிக்கிழமை எபிசோடில் நிஷாவை போரிங் போட்டியாளர் என அறிவித்து சிறைக்குள் தள்ளிய கமல், ஜித்தன் ரமேஷை வெளியேற்றினார்.

  ஞாயிற்றுக்கிழமையான இன்றைய எபிசோடில் ரியோவின் ஃபேவரிச கேமுக்கு செம பஞ்ச் கொடுக்க காத்திருக்கிறார் கமல்.

  என்ன ரியோவே இப்படி சொல்லிட்டாரு.. ஒரு முடிவோடதான் இருக்காங்க போல.. கடைசியில் நொந்து போன நிஷா!

  கமல் மீது குற்றச்சாட்டு

  கமல் மீது குற்றச்சாட்டு

  அர்ச்சனாவின் அன்பு கேங் செய்யும் குரூபிசம் குறித்து கமல் கேள்வி கேட்க மாட்டேங்கிறார். நிறைய மிக்சர் தின்னிகளை பிக் பாஸ் வீட்டில் வைத்துக் கொண்டு, சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டியை எல்லாம் வெளியேற்றி விட்டனர் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் முடிவு கட்டும் விதமாக இந்த வார எபிசோடு அமைந்துள்ளது.

  எவிக்‌ஷன்

  எவிக்‌ஷன்

  இன்றைய முதல் புரமோவிலே இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதை கமல் சொல்ல வரும் காட்சிகளை போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளனர். நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேறிய நிலையில், இன்னைக்கு அவருடன் ஜோடியாக விளையாடிய நிஷா வெளியேற உள்ளார். ரியோவுக்கு அது நல்லாவே தெரிந்ததால் தான் தான் ஷிவானியை காப்பாற்ற நினைக்கிறார்.

  மைக் பிரச்சனை

  மைக் பிரச்சனை

  பாலாஜி முருகதாஸ் மைக் மாட்ட மறந்து விடும் பிரச்சனை பற்றி ஏகப்பட்ட முறை கமல் பேசிய நிலையில், அர்ச்சனா மைக்கை கழட்டி வைத்துவிட்டு ரகசியம் பேசுவதை ஏன் கேட்கவில்லை என்கிற கேள்விக்கு விடையும் அளிக்கும் விதமாக இன்றைய நிகழ்ச்சியில், அர்ச்சனா மைக் கழட்டி வைப்பது பிக் பாஸ் விதிக்கு எதிரானது என்றும், இப்படி பண்ணவங்கள வெளியவே அனுப்பி இருக்கோம் என்றும் வார்ன் செய்துள்ளார்.

  ஃபேவரிச குரு

  ஃபேவரிச குரு

  பிக் பாஸ் வீட்டில் குரூப்பாக விளையாடி விட்டு அப்படியே டைட்டிலை தட்டித் தூக்கிக் கொண்டு போகலாம் என நினைத்து விளையாடி வருகிறார் ரியோ ராஜ். இன்றைய மூன்றாவது புரமோவில் ரியோவின் அந்த மாஸ்க்கை அழகாக கிழித்து எறியும் கமலின் சாட்டையடி பேச்சு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

  போட்டுக் கொடுத்த பாலா

  போட்டுக் கொடுத்த பாலா

  மூன்றாவது புரமோவில், ரோபோ டாஸ்க் செய்தவர்கள் டீமாக உட்காருங்கள் என்று கூற, ஹவுஸ்மேட்கள் அணிவகுத்து அமர்ந்தனர். யாரு, ஒரு டீமில் இருந்து கொண்டு இன்னொரு டீமுக்காக விளையாடியது என்ற கேள்வியை கமல் கேட்டதும், ரியோ தான் என பாலா பக்காவாக போட்டுக் கொடுத்தார். பாலாவும் ஷிவானிக்கு ஃபேவரிசம் காட்டியதை சொல்ல மாட்டார்கள்.

  சுட்டிக்காட்டிய ஆரி

  சுட்டிக்காட்டிய ஆரி

  அர்ச்சனாவுக்கு ஃபேவராக அவரை காப்பாற்றும் விதமாக ஏகப்பட்ட முயற்சிகளை நட்பு ரீதியாக ரியோ ராஜ் எடுத்தார் என ஆரியும், ரியோவின் தவறுகளை கமலுக்கு முன்னால் சுட்டிக் காட்டினார். இன்னைக்கு ரியோவுக்கு இருக்கு கச்சேரி என பிக் பாஸ் ரசிகர்கள் கருத்துக்களை அடித்து நொறுக்கி வருகின்றனர்.

  கேபியை காப்பாற்ற துடித்த ரியோ

  கேபியை காப்பாற்ற துடித்த ரியோ

  இவங்க ரெண்டு பேரும் சொல்லாத விஷயத்தை, ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்த விஷயத்தை கமல் பேசினார். ஆரியிடம் இருந்து கேபியை காப்பாற்ற ரியோ போராடியதும், அதை புரிந்து கொள்ளாமல் ஏன் பண்ற என கார்டன் ஏரியாவில் அன்பு குரூப் உடன் சேர்ந்து ரியோ பேசியதையும் கேட்டு வெளுக்கப் போவதை புரமோவில் அதிரடியாக காட்டியுள்ளனர்.

  குறும்படம் இருக்குமா?

  குறும்படம் இருக்குமா?

  பாலாஜி முருகதாஸ் தப்பு பண்ணா, சம்யுக்தா தப்பு பண்ணா, உடனே குறும்படம் போட்டுக் காட்டுறார் கமல் சார். இந்த ரியோவுக்கு ஒரு குறும்படம் கூட போட்டுக் காட்ட மாட்டேங்கிறாரோ என ரசிகர்கள் பட்ட கவலை இன்று தீருமா? அல்லது கமல் கேட்ட உடன் ரியோ தன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பாரா? என்பதை நிகழ்ச்சியில் கண்டு ரசிக்கலாம்.

  English summary
  After Balaji Murugadoss and Aari point out Rio Raj played double game in Robot task, Kamal Haasan roasts Rio Raj for her favorism to Gabriella.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X