வேட்டைக்கு ரெடியா? பிக்பாஸ் 6க்கு தயாரான போட்டியாளர்களின் முழு லிஸ்ட்!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் 5 சீசன்களை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாசன் பிக்பாஸ் சீசன் 6ஐ தொகுத்து வழங்க உள்ளார்.

ஆக்டோபர் 9ஆம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்க உள்ளதாக, விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகார பூர்வ தகவலும் வெளியாகியுள்ளதால், நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமுடன் உள்ளனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாகும், இந்தியில் பிக்பாஸ் 15 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கில் 6வது சீசன் தொடங்க உள்ளது. பிரபலங்களின் வாழ்க்கை முறை எப்படி உள்ளது, அவர்கள் எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்க்க மக்களுக்கு இருக்கும் ஆர்வமே இந்த நிகழ்ச்சி வெற்றி பெற காரணம்.

பொதுமக்களுக்கு இடம் உண்டா?

பொதுமக்களுக்கு இடம் உண்டா?

பிக் பாஸ் சீசன் 5 கடந்த ஜனவரி மாதம் ஒளிபரப்பானது இதில்,அறிமுகம் இல்லாதவர்கள் வந்ததால் டிஆர்பியில் சற்று சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த முறை பக்காவாக பிளான் போட்டு விஜய் டிவி, போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறது. பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று சமீபத்தில் ஒரு ப்ரோமோவை கூட விஜய்டிவி வெளியிட்டு இருந்தது.

 பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டின் சிறப்பே வீட்டின் அலங்கார வேலை பாடுதான். பிக்பாஸ் வீடு கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது அந்த பணி நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் குறித்த பட்டியலை பிக்பாஸ் குழு ரகசியமாக வைத்துள்ள போதும், போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது.

கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்

கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரம், ஏறக்குறைய உறுதியான நிலையில், போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி உள்ளது. அதில், ஜி.பி.முத்து, தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகை ஷில்பா மஞ்சுநாத், விஜய் டிவி மைனா,பாடகி ராஜலட்சுமி, சீரியல் நடிகை ஆயிஷா, வி.ஜே.மகேஸ்வரி,அமுதவாணன், மதுரை முத்து, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், நடிகை விசித்ரா, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, மணிகண்டன் ஐஸ்வர்யா ராஜேஷ் சகோதரர் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது.

ரசிகர்கள் ரெடி

ரசிகர்கள் ரெடி

இதுதான் நிச்சயமான போட்டியாளர்கள் என்று சொல்ல முடியாது, ஏகப்பட்ட மாற்றங்கள் நடக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அக்டோபர் 9ந் தேதி தான் யார் யார் போட்டியாளர்கள் என்பது தெரியவரும். அடுத்த வாரம் தொடங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ரெடியாக காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X