Don't Miss!
- News
ஆளுநர்களை நீக்க சட்ட திருத்த- ராஜ்யசபாவில் தனிநபர் தீர்மானம் கொண்டு வருவேன்: திருச்சி சிவா உறுதி
- Finance
விண்ணை முட்டிய FASTag வசூல்.. மத்திய அரசின் பிப்ரவரி அறிவிப்பு மூலம் ஜாக்பாட்..!
- Technology
LOGOக்களில் இவ்வளவு ரகசியங்கள் ஒளிந்திருக்கா? மொபைல் யூஸர்கள் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
- Lifestyle
ருசியான... சோயா பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
அனுமதி கிடைச்சாச்சு! பஜாஜின் விலை குறைவான காரை இனி தனி நபர்களும் வாங்கிக்கலாம்! மாருதிக்கு பலத்த அடி விழபோகுது
- Sports
உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் நான் தான்.. விராட் கோலியே எனக்கு பின்னாடி தான்.. பாக். வீரர் பேட்டி
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
கமல்ஹாசனின் ‘’இந்தியன் 2’’ ரிலீஸ் எப்போது.. முக்கிய அப்டேட்!
சென்னை : இந்தியன் 2 திரைப்படம் குறித்த முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் இந்தியன். இந்த வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.
இதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. 25 வருடங்களுக்கு பிறகு ஷங்கர் கமலஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவானது.
நீங்கள் இருந்திருந்தால்..மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்..கணவரின் போட்டோ முன் கலங்கிய மேக்னா ராஜ்!

இந்தியன் 2
இந்தியன் 2 படத்தை அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

படப்பிடிப்பு பாதிப்பு
கடந்த 2019 இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சென்னை, போபால் உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் நடத்தினர். ஆனால் 2020இல் நடந்த கிரேன் விபத்தால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதை அடுத்து கொரோனா ஊரடங்கு, தயாரிப்பு நிறுவனத்துடன் பிரச்சனை என பிரச்சனைகளால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. பின்னர் ஒரு வழியாக ரெட் ஜெயண்ட் உதவியோடு தயாரிப்பு நிறுவனத்துடனான சண்டை ஓய்ந்த்தை அடுத்து தற்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

கார்த்தி முக்கியரோலில
மேலும் இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கியமான வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது. இந்தியன்-2 படத்திற்கு ஷங்கருடன் சேர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் ராதவேலுவுக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மாற்றப்பட்டு இருக்கிறார்.

தீபாவளிக்கு ரிலீஸ்
இந்நிலையில் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருப்பதால், இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு ஒரு மாதம் இடைவெளிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை நோக்கியே படத்தின் பணிகளும் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியன் 2, ராம் சரண் 15வது படம் என இரண்டையும் மாறி மாறி இயக்கி சீக்கிரமே படப்பிடிப்புகளை முடிக்க ஷங்கர் தனித் தனி குழுக்களை வேலைக்கு அமர்த்தி உள்ளார்.
-
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திய புரட்சித் தளபதி விஷால்.. என்ன ஆச்சு?
-
அதிர்ச்சி.. இளம் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா விஷம் குடித்து தற்கொலை.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-
Pathaan Box Office Prediction: பாலிவுட்டை மீண்டும் தூக்கி நிறுத்துமா பதான்? முதல் நாள் வசூல் கணிப்பு