இவைதான் கமல் ஹாஸனின் கடைசி படங்கள்... அப்போ சபாஷ் நாயுடு?
Recommended Video

சென்னை: தனது கடைசி படங்கள் விஸ்வரூபம் 2, இந்தியன் 2 மட்டுமே. அவற்றுக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்க மாட்டேன் என்று கமல் ஹாஸன் அறிவித்துள்ளார்.
கமல் ஹாஸன் தீவிர அரசியலில் குதித்துவிட்டார். நாளை தன் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்கிறார்.

21-ம் தேதி முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்யப் போகிறார் கமல். இந்த நிலையில் கைவசம் உள்ள படங்களை முடித்துக் கொடுப்பதிலும் தீவிரம் காட்டுகிறார்.
இப்போது விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் நடிக்கிறார் கமல்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "விஸ்வரூபம் 2, இந்தியன் 2 மட்டுமே நான் நடித்து வெளியாகும் கடைசி படங்கள். வேறு எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை," என்று கூறியுள்ளார்.
அப்படியெனில் சபாஷ் நாயுடு ட்ராப்பா? இதுகுறித்து கமல் எந்த விளக்கமும் கூறவில்லை.


Click it and Unblock the Notifications











